முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  வியாதிகள்
 
கர்ப்ப காலத்தில் வரும் காமாலை நோய்
Webdunia
- ஷைலஜா

மஞ்சள் காமாலை நோய் வைரஸ் கிருமியினால் ஏற்படுவது.
0.4% பிரசவத்தில் காமாலை நோய் காணப்படுவதாய் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைரஸினால் உண்டாகும் காமாலை நோய் பொதுவாக சுத்தமில்லாத குடி நீரினால் தான் பரவுகிறது.

சுத்தமான கொதிக்க வைத்து ஆற வைத்த குடி நீரை உபயோகப்படுத்துவது இந்த நோயினை தவிர்க்கும் வழியாகும்.

மேலும் வீட்டில் யாருக்காவது இந்தக் காமாலை வந்திருந்தால் அவர்களின் துணிமணி, சாப்பாடு தட்டு, முதலியனவற்றை தனியாகவும் சுத்தமாகவும் வைத்தல் வேந்தும். வாந்தி மலம் மூலமாகவும் இந்நோய் பரவும்.

கர்ப்பமாகும் முன்னரே இந்த நோய்க்கு தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுதல் நலம்.

காமாலை வந்து விட்டதே என கர்ப்பத்தைக் கலைக்கத் தேவை இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் அதுஆபத்தானதாம்.

காமாலையினால் குறை உள்ள குழந்தையோ வேறு ஏதும் கோளாறு உள்ள குழந்தையோ பிறக்க வாய்ப்பு இல்லை. ஐந்தாம் மாதம் ஆன பிறகு வந்தால் அந்த பாதிப்பில் குறைப் பிரசவமாக நேரிடலாம் என சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

எண்ணை கொழுப்பு பதார்த்தங்களை நீக்கி விட்டு, கிழா நெல்லி போன்றவற்றை சாப்பிடலாம். இதனால்
நோயின் பாதிப்பு குறையும்.

காமாலை நோய் பாதிப்பில் ரத்தம் உறையும் தன்மை குறைந்து போகும். பிரசவத்தின் போது அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது. சரியானபடி வைத்தியம் செய்யாவிடில் தாயின் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும்.

கர்ப்பம் ஆனதினாலேயே லிவரில் சில கொழுப்பு மாறுதல்களினால் காமாலை வர வாய்ப்பு இருக்கிறது.
காமாலை வந்து பிரசவம் ஆனவர்கள் பிறகு கருத்தடைமாத்திரைகள் எடுக்க கூடாது, காப்பர் டி பொருத்திக் கொள்ளலாம்.