இந்திய மருத்துவம் பிறப்பு முதல் இறப்பு வரை
தோஷ வகுப்பு : முதலில் தோஷம் என்றால் மாயம் மந்திரம் என எண்ண வேண்டாம். குழந்தைக்கு ஒவ்வாத உணவை குழந்தையோ தாயாரோ உண்டாலும் விலக்கப்பட்ட பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் குழந்தைகளை தொட்டாலும் இவர்கள் மூலமும் ஏற்படும் நோய்களே, மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் குறைந்தாலும் ஏற்படும் பிரச்சனைகளே தோஷம். சரியில்லாதவைகளை விலக்கி சரியானவைகளை குழந்தைகளுக்கு அளித்தால் தோஷமில்லை. இன்று சொன்னால் மக்களுக்கு புரியும் அன்று, ‘கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பரவும் என்றால் நம்ம மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே ஒரே வார்த்தையில் தோஷம் என சொல்லிவிட்டனர் பெரியவர்கள்.
பட்சி தோஷம் :
குறிகள் : குழந்தை முலைப்பாலுண்ணாது, தண்ணீராய் வயிறு கழியும், வாந்தி பண்ணும், உடல், சூடேறி குளிரும் இப்படி மாறி மாறி ஏற்படும் முகம் சுருங்கும்.
காரணம் : அதிகாலை வேளையில் வீட்டை விட்டு வெளியில் குழந்தை கொண்டு வரும் போது சீதோஷண நிலை வீட்டுக்கும் வெளியிலும் மாறும் இதை குழந்தை தாங்காது எனவே தான் பட்சிகள் காலையில் பறந்து போகும் வேலையில் கொண்டு வர கூடாது என்று சொல்லி வைத்தனர். பட்சிகள் பறந்து செல்லும் வேளை என குறியீடு செய்தால் பட்சி பெயரிலேயே பட்சி தோஷம் என பெயர் இட்டனர்.
பறவை தோஷம் :
குணம் : தலை கணமாய் இருக்கும், உடல் தளர்ந்து காணப்படும், உடல் சூடேறும்,நா உலரும் வலிப்பு போல் வளையும் அடிக்கடி திடுக்கிட்டு எழுந்து அழும் வயிறு போகும் முகம் மஞ்சளாய் மாறும்.
காரணம் : சரியான காற்றோட்டம் இல்லாமல் பறவை வீடு போல் எல்லா பக்கமும் அடைத்து வெப்பத்தாலும் கோழி, புறா, எருமை சாணி இவைகளின் எச்சம் சாணி, இவைகளில் இருந்து வரும் அசுத்தங்கள் காற்றில் கலந்து வருவதாலும் நோய்க்கு ஆளான காய் கறிகளை தாயார் உண்பதாலும் ஏற்படும்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணம் எழுதினால் இதுவே புராணம் போல் ஆகிவிடும் எனவே நோய் குறிகளை மட்டும் முதலில் சொல்கின்றோம். கடைசியில் மருந்துகளை சான்று எது என்று கூறுகின்றோம்.
எட்சி தோஷ குணம் :
இரத்தம் சூடேறி உடல் தேயும் உடல் நாறும் கொஞ்சமாக வயிறு கழியும் பாலுண்ணாது பதறியழும் கண்ணை தன் கைகளால் பிசையும், மயங்கி புரளும்.
வீங்கு புள்ளிகள் தோஷம் குணம் :
வாந்தி பண்ணும் பசுமையாகவும் பால்கோலவும் கழியும் பின்கையால் முகத்தை துடைக்கும், உச்சி குழியும் நாவும் உலரும்.
தூங்கு புள்ளி தோஷ குணம் :
கழியும் வாந்தி பண்ணும் மயக்கமாய் தூங்கும் திடீரென்று உரத்த குரலில் அழும், தாய் முகத்தை பார்க்கும், தண்ணீரை நிறைய குடிக்கும். பற்களை கடிக்கும், உச்சி பள்ளம் விழும்.
விளக்கொளிக்கண் தோஷ குணம் :
பாலை வாந்தி பண்ணும், பால் சாப்பிடாது, சோர்ந்து காணப்படும் சிரிக்கவே சிரிக்காது.
வெங்கண் தோஷ குணம் :
பால் போல் கழியும் உடல் சுடும், வெளுக்கும் வயிற்றில் இரச்சல் உண்டாகும் வலிக்காணும்.
கருடக் கண் புள்ளின் தோஷம் :
வாயில் சதா நீர் வடிந்து கொண்டே இருக்கும் வாந்தி பண்ணும் இரு விழியும் தாழும்.
முக்கியம் : வாந்தி பண்ணாமல் வாயில் நீர்வடிந்தால் அது தோஷமில்லை.
செங்கண் புள்ளின் தோஷம் :
கண்கள் சிவந்து நீர் வடியும், அதே சமயம் தலை குளிர்ச்சியாய் இருக்கும். கையால் முகத்தை துடைத்துக் கொண்டே இருக்கும். சூடாய், வெப்பாய் லேசான மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் கழியும்.
அந்தி புள்ளின் தோஷம் :
உடல் முழுவதும் நரம்புகள் விருப்பேறி வெளியில் தெரியும் அளவிற்கு புடைக்கும்.
நீர் புள்ளின் தோஷம் :
குழந்தை வெளுக்கும் ; பெரு மூச்சு விடும். இரவும், பகலும் அலறியழும், உடல் வியர்த்து கொண்டேயிருக்கும்.
புள்ளின் தோஷ குணம் :
குடித்த பால் தங்காது பச்சையாய் கழிந்து கொண்டே பறவை போல் சீறியழும். நாளுக்கு நாள் இளைத்து கொண்டே வரும்.
மூட்டு தோஷ குணம் :
மாத விடாயான கன்னிகள் குழந்தையை எடுத்து மடியில் வைத்தால் வாந்தி பண்ணும். கறுக்கும் (அன்று துணியை மட்டும் உபயோக படுத்தினார்கள் இன்று நவீனமான வாடை வெளியில் தெரியாத வண்ணம் உறிஞ்சும் பொருட்களை உபயோக படுத்துவதால் பெரியதாய் பாதிப்பதில்லை )
கெற்ப தோஷம் : ( சவளை ) உடல் நொந்து சிவக்கும், இளைக்கும், கை காலில் அழுக்கேறும்.
தேரைத் தோஷம் :
உடல் உலர்ந்து வற்றும் வெளுக்கும் நெஞ்சு உயர்ந்து சுடும் ; கை, கால் வற்றி முடங்கும், வயிறு ஊதி காணப்படும். மலந்தீயும், முகம் வாடும், காது கேட்கும் திறன் குறையும் பிள்ளை சற்றும் தேறாது.
இன்று தோஷ வகுப்புகளை நவீன மருத்துவர்கள், நம்பியும், நம்பமுடியாமலும், இருக்கிறார்கள். இவர்கள் கேட்பது ஆதாரம், இன்று ஆதாரம் காட்டி, உண்டு என்று நம்ப வைக்க வேண்டிய வேலை இல்லை. ஆங்கில மருந்து விதத்தில் இதை மந்தம், கழிச்சல், ஊட்ட சத்துக் குறைவு, என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தோஷம் போக, மாந்தம், கழிச்சல், ஊட்ட குறைவு என தனித்தனியாகவும் இந்திய முறையில் உள்ளது.
அடுத்து : குழந்தையின் மந்த வகுப்பு ( செறியாமை ) கள் பற்றி என்ன எத்தனை வகுப்புகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போம்.
|