|
|
|
|
தாய் பால் கொடுக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு பின் காணும் தோஷம், மாந்தம், கனம், சுரம், ஜன்னி, கரப்பான் என்ற நோய்கள் வரும் என அறியவும். இந்நோய்கள் 0-12 வயது வரை குழந்தைகளை தாக்கும். இந்நோய்களின் அறிகுறிகளை எளிய முறையில், மலம் மற்றும் உடல் மாற்றங்களினால் கண்டு அறியலாம். இவற்றில் தோஷம் மற்றும் மாந்தம் பற்றிய விளக்கம் கண்டோம். இனி கணம், சுரம், ஜன்னி, கரப்பான் பற்றி அறியலாம். இவற்றிற்கு கடைசியில் மருந்துகளும் கூறுகிறேன்.
கண வகுப்பு
மாந்தம் முதிர்ந்து, வாத கணம், பித்த கணம், ஸ்லேஷம் கணம். மாந்த கணம், நீர் கணம், பிரளிக்கணம், குலைக்கணம், அழிக்கணம், மகரகணம், ஊதுகணம், வரட்கணம், கொதிப்புகணம், வீக்கணம், பிறக்கணம், ஆமகணம், தேரைக்கணம், மூக்குக்கணம், மூலக்கணம், போர்க்கணம், இரத்தக்கணம், விஷமாந்த கணம், ஊதுமாந்த கணம், அந்தகக் கணம், மந்தார கணம், எரிகணம் என கணங்கள் பன்னிரண்டாண்டு மட்டும் குழந்தைகட்கு வரும்.
வாத கணம்
உடல் கனத்து குழந்தை புகைத்து இருமும். நாவரட்சியால் தாகம் எடுக்கும், சுரம் வரும், பசிமந்தம் காணும், நீர்சுருக்குடன் மலம் கழியும்.
பித்த கணம்
உடலில் எரிச்சல் ஏற்பட்டு நாக்கும், கடைவாயும் புண்ணாகும், சுரம் மயக்கம் காணும். மலம் மஞ்சள் போல் கழியும்.
ஸ்லேஷம் கணம்
உடம்பில் தினவு மற்றும் சொரி ஏற்பட்டு, வாய் நாறும், கீழ்வாயும், மேல்வாயும் வெடித்து புண்ணாகும், கோழை தொண்டையில் இருந்து இருமலை ஏற்படுத்தும்.
கண மாந்த குணம்
உடல் இளைக்கும், வாயில் உமிழ்நீர் சுரந்து வாந்தி மற்றும் இருமல் எற்படும், விழி சுழலும், வயிறு இறைந்து, பாசி போல் மலம் கழியும், அசதி மிகும்.
மூலகணம்
முகம் கருங்சிவக்கும், காய்ச்சல், வயிற்று இறைச்சல், விடாது தலைவலி காணும், வாதம் பித்தம் அதிகரித்து ஆசனவாய் கடுத்து உளையும், மலம் சீதம் இரத்தமாய் கழியும்.
முக்கல் வயிற்று கடுப்பு
தாகம் அதிகரிக்கும், சாப்பிட மனம் இராது, தாதுக்கள் வற்றும், முக்கலுடன் ஆசனவாய் கடுத்து சீத இரத்தமாய் மலம் கழியும்.
இரத்த கணம்
குழந்தையின் இடுப்பும், தொடையும் உளையும், சுரம் காயும். உடல் தகித்து வாடும். நாடி அயரும். குழந்தை அடிக்கடி இருமும். ஆசனவாயில் கடுப்பு எற்படும். மலத்தில் இரத்தம் கழியும்.
மந்தார கணம்
சுரம், மயக்கம், சுவாசம் காணும், வயிறு ஊதும்.
ஏரி கணம்
உடல் எங்கும் எரியும், வாயில் உமிழ் நீர் வடியும், வாய் வழி சுவாசம் ஏற்படும், குழந்தை அலறி அழும்.
ஆம கணம்
உடல் இளைக்கும், தாகம் மிகும், பசி மங்கும், வயிறு இரைந்து மலம் கழியும், கால் குளிர்ந்து இருக்கும், குழந்தை கண் விழியாது அயரும், திடுக்கிட்டு எழுந்து சீறி அழும், மூக்கு உயரும், புருவம் சிருக்கும்.
நீர் கணம்
கண்களில் நீரும் பீளையும் வடியும், மலம் தண்ணீரும் சீதமாயும் பச்சை மஞ்சள் நிறமாயும் கழியும், வயிற்றில் கடுப்பு காணும்.
பேராம கணம்
கை கால் குளிரும், கண் வளையமாகும், சுரம் அதிகரிக்கும், வாந்தி பண்ணும், தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழும், வயிறு பொருமி மலம் கழியும், உணவு பிடிக்காது, குழந்தை வெருவி பார்க்கும்.
மூக்கு கணம்
குழந்தை அடிக்கடி வாந்தி பண்ணும், நாக்கு வேகும், தலைவலி, நடுக்கம், நாவரட்சி தாகம் காணும், ஆசனவாய் கடுத்து, மூக்கி மலம் சீதமும் இரத்தமுமாய் கழியும், உடம்பு தீ போல் எரியும், கருத்து வற்றும்.
மகா கணம்
முகம், புரங்கால், புரங்கை மினுக்கும், விழி வெளுக்கும், நாக்கு உதடு புண்ணாகும், குழந்தை மயங்கும்.
பிரளிக் கணம்
குழந்தை துடித்து, ஓங்கி அழுது அலறும், வயிறு பொருமி ஏப்பம் உண்டாகும், மலம் மாப்போல் கழியும், வயிறு பொருமி அடிக்கடி முக்கும் குடலை பிரட்டி வலிக்கும், வாய் உலரும், முத்து போல் நாசியில் நீர் வடியும், முகத்தில் மஞ்சள் மணம் மணக்கும், மேல் மூச்சு இளைப்புக்காணும்.
பிரக்கணம்
குழந்தையின் கைகால் சில் என்று இருக்கும். தூக்கம் மிகும், விழி சொருகும், தலையை புரட்டும், பால் அருந்தி வாந்தி பண்ணும், வயிறு பொருமி பசுமையாயும் தோய்ந்த தயிர் போல் மலம் கழியும்.
வரட்கணம்
உடல் வற்றும், முகம் மஞ்சள் நிறமாய் பூத்திருக்கும், உடல் வெதும்பி, நெஞ்சு துடிக்கும், நாக்கில் மஞ்சளாயும் வெண்மையாயும் முடகளும் அதன் நடுவில் மூன்று வெடிப்புந் தோன்றும். இருமல் சளியும் மிகும். இருமல் புகைந்து வரும், தூக்கம் மயக்கம் காணும்.
கொதிப்புக் கணம்
குழந்தையின் குரல் கம்மும், நெஞ்சும் விலாவும் கொதிக்கும், நெற்றி வியர்க்கும், பஞ்சு போல் கண் வெளுக்கும், இருமல், தலைவலி காணும்.
அந்தகக் கணத்தின் குணம்
மூளையில் கனல் ஏரி உடல் வெதும்பும், நாக்கு உலரும், விழி வெளுக்கும், முகம் மஞ்சள் நிறமாய் மினுக்கும்.
ஊது மாந்த கணம்
குழந்தை உடல் கண், கால் வீங்கும், நாக்கு புண்ணாகும், சுரங்காயும், கைகால் சோரும், சுவாசம் மிகும், தண்ணீர் சாப்பாடு உட்கொள்ளாது.
|
|
|
|
|
|
|
|
|
|
|