|
|
|
|
இந்திய மருத்துவம் பிறப்பு முதல் இறப்பு வரை
டீன் ஏஜ்
மனித வாழ்க்கை வளர்ச்சியில் பலரையும் பயமுறுத்தும் பருவம் டீன்-ஏஜ். குறிப்பாக, 15 வயது முதலே ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுதல்கள் ஏற்படக்கூடிய பருவம்.
குரலில், உடலில், நடையில் பல மாற்றங்கள் நிகழும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் கவனிக்கப்படவேண்டியவை.
நேற்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருந்தார்கள். இன்று சுகாதாரமற்ற, போஷாக்கற்ற சூழலில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
இந்த வயதில் தான் பெற்றோர்களுடன் தலைமுறை இடைவெளி, மன ஏக்கங்கள், பருவ ஆசைகள் எல்லாமே ஏற்படும். குறிப்பாக பருவ ஆசை ஏற்படுத்தும் பாடு பலவிதம்.
உதாரணமாக,
தன்னை அழகுபடுத்திக் கொள்ளுதல்,
தன்னை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல்,
தனக்கென்று வருமானம் தேடிக்கொள்ள முயற்சிப்பது,
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை,
பொறுமை,
அடுத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுதல்,
கடைசியாக கதாநாயகன் போல் இருத்தல்.
தீமைகள் : வேலை இல்லாமல் மேலே சொன்ன இவைகளை கடைபிடித்து தன் குடும்பத்தாரை மறந்து பெண்ணே பெரிது என்று அலைந்து தோல்வியில் முடியும் போது தன்னையும் அழித்து குடும்பத்தினரையும் கவலையில் வைத்து கலகத்தில் முயற்சிக்கின்றன.
இவைகள் பிரச்சனைகள். இதனால் ஏற்படும் மாறுதலான பழக்க வழக்கங்கள், வரும் நோய்கள் என்ன என்று பார்ப்போம். வேலை தேடுவதாலோ அல்லது கண்ட இடங்களில் சுற்றுவதாலோ நேரமாறி உணவு அருந்துவதாலோ பொதுவான வியாதிகள் வரும். வரும் வியாதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு கடைசியில் மருந்துகளும் முறைகளும் கொடுக்கப்படும் :
மாந்தம், குடற்படுவன் (அல்லுர்), கரப்பான், நாவறட்சி, வயிற்றெரிவு, உப்பிலும், வாந்தி, பொருமல், மலச்சிக்கல், மூலம், சுரம், பேதி, சுவாசம், காசம், நாமுள், பித்த இருமல், ஜன்னி, வலிப்பு, நாட்பட்ட சுரம் (மலேரியா), அண்டவாயு, நீரடைப்பு, கதையடைப்பு, வெண்குஸ்டம், தோல் வியாதிகள், இரத்த கருப்பு, மூலக்கடுப்பு, கிராணிகழிச்சல், பீணிசம், அதிக வியர்வை, உழலை, எரிவு, கைப்பு வாந்தி, வயிற்று வலி, அஜீரணம், எலும்புருக்கி, பாண்டு சோவை சுவாசகாரம், ஷயரோகம் இளைப்பு நோய், இரைப்பு நோய், மார்பு நோய், மந்தாக்கினி, காமாலை, மஞ்சள் காமாலை, அபஸ்மாரம், பைத்தியம், தலைவலி, ஒரு பக்க தலைவலி, கபால நீர், மூலவாயு, ஜில் வாயு மேககிரந்தி, பீணிச தலைவலி, வெண்மேகம், மதுமேகம், வெட்டை சோகை, அன்ன துவேசம், வெருவயிறு, விந்து நஷ்டம், புளித்த ஏப்பம், விதை வாதம் சொறி பாட காலெரிவு, மாலைக்கண் உஷ்ண நீக்கம், பவுத்திரம், பிரமை, மூர்ச்சை மயக்கம், இரத்த காசம், கண் புகைச்சல், அம்மை இதய நோய்கள், நரம்பு தளர்ச்சி, காம இச்சை இல்லாமை, குறி சோர்வு வீக்கம் என பொதுவான நோய்களும் பெண்களுக்கு என்ன நோய்கள், ஏன் வருகின்றன என்ற பொது காரணம் எழுதிவிட்டேன். இன்று நவீன மருத்துவ வசதியால் ஏன் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.
பெண்களுக்கு : உஷ்ணம், கணச்சூடு, வெள்ளை, பெரும்பாடு, வெட்டை, முறையில்லாத மாதாந்திர விலக்கு, யோனிப்புற்று, கர்ப்ப புற்று, மார்பு (இலை) புற்று, சினைப்பை வளர்ச்சியில்லாமல் வயிற்றுவலி, சூசிகவாயு, சூதக வாயு, தலைமுடி கொட்டுதல், கால்சியம் குறைவு, மதுமேகம், கைகால் வலி, கண்டமாலை, கை கடுப்பு, பறங்கிப்புண், சூலை, கல்லீரல் மண்ணீரல் பெருத்தல், பாண்டு காமாலை, மஞ்சள் காமாலை மந்தரகாறும், மேக வெள்ளை, ஊதல் அரிசிரந்தி மயக்கம், இரத்த அழுத்தம், இரத்த பித்தம், வெட்டை வாய்வு, உடல் நலிவு, கண்ணை சுற்றி விடும் கருவளையம், சந்திராவர்த்தம், சூரியா வர்த்தம், காதுவலி, ரத்த குண்மம், நரம்புகளில் ஏற்படும் வாயு இவைகள் பெண்களுக்கு அதிகமாக வருகின்றன. அதாவது 15 முதல் 35 வயது வரை இதில் பாதிக்கப்படாத பெண்களே இருக்க முடியாது. கால்சியக்குறைவு, மனநிம்மதியின்மை, ஆண்கள் மூன்றினாலும் பெண்களுக்கு நோய்கள் வரும்.
சரி! ஆண்கள் எப்படிக் காரணம்? பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். தங்கள் கணவரின் போதையின் போது உறவு கொள்வதாலும் நோய்கள் ஏற்படும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|