முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஆயுர்வேதம்
 
ஆண்களுக்கு உள்ள பிரச்சனைகள் :
Webdunia
இந்திய மருத்துவம் பிறப்பு முதல் இறப்பு வரை

ஆண்களுக்கு உள்ள பிரச்சனைகள் :
முதலில் சொன்ன பொதுவான வியாதிகளை தவிர ஆண்களுக்கு சில விசேஷ வியாதிகள்.

உஷ்ண எரிச்சல்

ஆண்குறி எரிதல்

வெட்டையால் வரும் சதை அடைப்பு

சூடு முற்றினால் வெள்ளை
வெள்ளை முற்றினால் வெட்டை
வெட்டை முற்றினால் மகனே
அடுத்து சுடு காட்டு கட்டை
என்பது சித்தர் பாடல்கள்

(இன்று ஏ.ஐ.டி.எஸ் யை வெட்டை என்று கூறுகிறார்கள்)
(நாங்கள் அல்ல)

குஷ்டம்

கல்லீரல் பிரச்சனை (மதுவினால் வருவது) மார்பு வலி

இதய நோய், வால்வு சோர்வு

உட்காங்கை

ராஜபிளவை

படர் தாமரை

மது மேகம்

சொறி, படை

நரம்பு தளர்ச்சி

தூக்கத்தில் விந்து வெளிப்படல்

சிறுநீர் கழிக்கும் போது விந்து வெளிப்படல்

உடலுறவில் வலுவின்மை

விந்தில் போதிய உயிரணுக்கள் இல்லாதது

நீர்த்து போன விந்து

சிறுநீர்ப்பை பலவீனம்

கிட்னி பிரச்சனைகள்

இவைகள் ஆண்களுக்கு வரும் தனிப்பட்ட நோய்கள். ஏன் வருகின்றது? இன்றைய இளைஞர்கள் கால், மனம் போன போக்கிலே போவதால் வரும் பிரச்சனைகள். இதை தவிர சொல்ல முடியாத எழுத முடியாத நோய்களும் உள்ளன என்பதையும் நினைவில் கொள்க. இனி மருந்தினை பற்றி பார்ப்போம்.

மருந்துகள்

மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்

ஒரு வைத்தியர் அறிந்திருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மூலிகையும், பாஷாணமும், சப்த தாதுக்களும் தேகத்தில் பரவி அது செய்கின்ற குணங்களை அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து வைத்து கொண்டால் குணமும், பிராணமும் அறிந்து நோயை கண்டறிந்து அதற்கேற்றாற் போல் கலந்து கொடுப்பவரே உண்மையான வைத்தியராவார். இது தெரியாமல் சரக்குகள் சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்துவதால் மற்ற முறைகள் (அலோபதி) நம் முறைகள் பெரிய அளவில் குற்றம் சாட்டி ஒதுக்கி விடுகின்றனர். முக்கியமான வீரம், கந்தகம், தாளகம், பாஷாணங்கள் இவைகள் சூடுமருந்தாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வைத்தியர் இதை கையாளுவதை விட்டுவிட்டு மூலிகைகளின் மேல் ஞாபகம் வைத்து பிரோயோகம் படுத்தினால் நோயாளிகள் பக்க விளைவுகள் இல்லாமல் குணமாவார்கள்.

மூலிகைகளின் மர்மங்கள் :

இன்று சாதாரணமாக ஏதோ ஒரு மூலிகையை எடுத்து காட்டாக அருகம்புல் வைத்துக் கொள்வோம். இதை அப்படியே சாப்பிட்டால் இம்மூலிகை நீக்கும் நோய்கள் நீங்கி விடும் என தவறான கண்ணோட்டம், எண்ணம் மக்களிடம் உள்ளது. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. அதே போல் சாபம் உண்டு என்பதையும் பெரியோர்கள் கூறியுள்ளனர். முனிவர்கள் சித்தர்கள், தேவர்கள், ரிஷிகள், பெரியோர்கள் ஆகியோர் இட்ட சாபங்கள் எல்லா மூலிகைகளுக்கும் உண்டு. ஒன்றை தவிர அதுதான் துளசி.

முதலில் நோய்க்கு தேர்ந்தெடுக்கும் மூலிகை நோய்வாய்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

அது உள்ள இடம் (முளைத்துள்ள இடம் கவனிக்கப்படவேண்டும்)

அம்மூலிகைகளை சுற்றி வளர்ந்திருக்கும் மற்ற தாவர வகைகளையும் கவனிக்க வேண்டும்.

மூலிகை பறிக்கும் விதமும் காரணமும் :

விதம்

முதல் நாள் செய்ய வேண்டியது. நமக்கு எந்த மூலிகைகள் தேவையோ அதை கண்டறிந்து அதை சுற்றி வளர்ந்திருக்கும் மற்ற தாவரங்களை அப்புறப்படுத்தி (குறைந்தது 1 : 1 சதுர அடி அளவுக்கு) சுத்தப்படுத்தி சாணிப்பால் இட்டு மெழுக வேண்டும்.

இரண்டாவது அதன் மேல் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து தீபதூபம் காட்ட வேண்டும்.

சாப நிவர்த்தி மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

3 வது நாள் செய்ய வேண்டியது. உயிர் மூலிகையிலேயே இருக்க வேண்டிய மந்திரத்தையும் உச்சரித்து பறிக்க வேண்டும்.

காரணம்

சுத்தப்படுத்த வேண்டிய காரணம் நமக்கு தேவையான மூலிகை பக்கத்தில் உள்ள தாவரங்களின் தன்மையை எடுத்து கொள்ளாமல் இருப்பதற்காகவும் சாணிப்பால் போடுவது. மூலிகையின் மேல் மற்ற பூச்சிகள் வண்டுகள் வந்து குடியேறா வண்ணம் இருப்பதற்காகவும் செய்கிறோம்.

தூப தீபம் போடுவதன் காரணம் மூலிகையின் இலையோ தண்டிலோ காயிலோ சிறு பூச்சிகள் அல்லது முட்டைகள் இருந்தால் அவை புகைப்பட்டு அழிந்துவரும் மேலும் மஞ்சள் பால் ஒரு கிருமி நாசினியாக வேலை செய்து அம்மூலிகைக்கு நோய் இருந்தால் தீர்த்தும், நோய் இல்லாமல் இருந்தால் மற்றவைகள் தாக்காமல் இருக்கும் தடுப்பு மருந்தாகவும் வேலை செய்யும்.

சாப நிவர்த்தி கட்டாயம் தேவை ஏனென்றால் ஒரு மூலிகையை மருந்துக்கும் பயன்படுத்தலாம், மாய மந்திரங்களுக்கும் பயன்படுத்தலாம். எனவே வழிவழியாக அது மந்திரம் சொன்னால் மட்டுமே மருந்துக்கோ மாயத்துக்கோ பயன்படவேண்டும் என்ற எண்ணத்தோடு பெரியோர்கள் சாபம் கொடுத்து வைத்தார்கள். சாப நிவர்த்தி பண்ணாமல் எடுத்து மருந்தாக பயன்படுத்தினால் பயன்படும். ஆனால் முழுமையான பலன் (100 %) கிடைக்காது என்பதை உறுதியாக கூறுகின்றோம்.

ஓர் ஆத்மா அவதிபடுவதை அதாவது நோயால் அவதிபடுவதை தீர்க்க மூலிகை உயிரோடு வேண்டும். உயிர் என்பது, மூலிகை உண்ண, வணங்கி போற்றி மருந்துக்கு பயன்படுத்த போகிறேன். இதற்கு முழுச்சத்தோடும் (பவர்) இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி எடுக்கும் சொல்லே உயிர் மந்திரம் ஆகும்.

இதே போல், கிருஷ்ணபட்சத்தில் எடுக்கும் வேர் கிழங்குகள் முழுமையான சக்தியோடு இருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இனி முக்கியமான பல மூலிகைகளின் பயன்களை அடுத்த வாரம் பார்ப்போம் :
மேலும்
இந்திய மருத்துவம் பிறப்பு முதல் இறப்பு வரை
இந்திய மருத்துவம் இந்திய மருத்துவம் முதல் இன்றுவரை
வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்
வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம்