முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஆயுர்வேதம்
 
இந்திய மருத்துவம் இந்திய மருத்துவம் முதல் இன்றுவரை
பின்னர் வைத்திய முறைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல சில அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். முக்கியமாக 64 மூலிகைகள் தேவை என்பதை அறிந்தார்கள். அதை மிகுந்த சுவாரஸ்யத்தோடு சொன்னார்கள்.

அதற்கு முதலில் 64 பச்சிலைகளை (மூலிகைகளை) எட்டு எட்டாக பிரித்தனர். அதை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் படியாக

தம்பண மூலிகைகள்
வசிய மூலிகைகள்
மோகன மூலிகைகள்
பேதண மூலிகைகள்
மாரண மூலிகைகள்
ஆகர்கண மூலிகைகள்
வித்துவேஷன் மூலிகைகள்
அற்சண மூலிகைகள்
என பெயரிட்டனர். இந்த மூலிகைகளின் செயல்களும் எட்டுவிதமானவை என்பதையும் விளக்கினார்கள்.

உதாரணமாக

1. தம்பணம் மூலிகைகள்

மருத்துவ செயல்பாடு :

மனம் அமைதியில்லாமல் தவிக்கும், எதிலும் கவனம் செலுத்த முடியாது, கவனம் சிதறும், முன்கோபம், படபடப்பு என்று மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும். யோகா, மந்திரம் செபிப்போர்க்கு தியானங்கள் செய்வோருக்கு பேருதவியாக இந்த மூலிகைகள் அமைந்தன.

சித்து உபயோகம் :

இந்த மூலிகைகளினால் தயாரித்த மருந்தை முறைப்படி தொடர்ச்சியாக அருந்தினால் விந்து வெளியாகாது. பெண்களோடு உடலுறவு கொண்டாலும் வெளியாகாது. மாற்று மருந்து அருந்தினால்தான் வெளியாகும். இதனால் எத்ததை பெண்களோடும் உறவு கொள்ளலாம் எனவும் அறிந்து கூறப்பட்டுள்ளது.

இயற்கை குணம் :

இம்மூலிகைகள் இயற்கை குணமே தம்பணம் தான். அதாவது நோயாளி எந்த நோயாலும் பாதிக்கப்பட்டு இருக்கும் போது இம்மூலிகைகள் அந்த நோயை மேலும் பரவ விடாமல், அதிகரிக்க விடாமல் அதே நிலையில் வைக்கிறது. ஆகையினால் எந்த மருந்து தயாரித்தாலும் வாத, வலிப்பு நோய்கள் நீங்கலாகதம்பண மூலிகை ஒன்றிலிருந்து வேர்பாகமோ, பூவோ, காயோ, கனியோ, சாறுகளோ, விதையோ, இவையோ ஒரே அளவு கலக்கப்படுகின்றது. இதனால் மருந்து அருந்தும் போது உள்ள நிலையிலேயே பரவவிடாமல் தடுத்து நிப்பாட்டும் தன்மையினால் நிச்சயமாக இம்மூலிகை இருக்க வேண்டும்.

வசிய மூலிகைகள்

சித்த உபயோகம் :

இம்மூலிகைகளான எட்டில் 1 இருந்தாலும் போதும் இதை திலகமாக தயாரித்து மையாக இட்டுக் கொண்டால் நாம் நினைக்கும் பெண்ணை அல்லது இதை பார்க்கும் பெண்களை தன் வசப்பட வைக்கலாம்.

மருந்து செயல்பாடு :

மனிதர்களை முதலில் நாம் பார்ப்பது முகத்தைத்தான். அதற்கடுத்து தான் மற்ற பாகங்கள். இம்மூலிகைகள் முகத்தில் தேஜஸ் கொடுக்கும் திறனுள்ளவை. மேலும் பித்த நரை, சிறு நரை முகச்சுருக்கம் மாற்றும் வல்லமை கொண்டவை. கண்களை குளிர்ச்சியாக்கி புதிய ஒளி கொடுப்பவைகள். தோல் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்கி தேகத்தை பொன்போல் மாற்றும் வல்லமை கொண்டவை. இதன்படி தம்பண மூலிகைகள் அப்படியே தம்பிக்கவைக்கின்றன. வசிய மூலிகைகள் பண்டங்கலாக பெருகாமல் இருக்க வைக்கின்றது.
1| 2
மேலும்
வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்
வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம்