இந்தியா முழுவதும் பண்டைக் காலத்தில் மருத்துவம் எப்படி இருந்தது ?
இந்திய மருத்துவத்திற்கென்று பெரும் பாரம்பரியம் உண்டு.
காரணம் அன்றைய இந்தியா ஒரு நாடாக இருந்ததில்லை. பல தேசங்களாக பிரிந்து கிடந்தது. பல்வேறு மொழிகளாகவும் சிதறிக் கிடந்தது.
அதனால் நோயின் தன்மைகளை நூல்கள் வாயிலாக தெரிந்து கொள்ளமுடியாது.
அதனால் சித்தர்களும், மருத்துவர்களும் நோயை தாங்களே கண்டறிந்தனர். அதற்கு வசதியாக நோயை மூன்று விதமாக பிரித்தார்கள்.
நாடி, நடை மூலம் நோயை கண்டறியும் சூத்திரத்தை உண்டு பண்ணினார்கள்.
இந்திய மருத்துவத்தில் ஒழுக்கம், பாவம், பெற்றோரை இகழ்தல் போன்றவைகளால் கூட நோய் வரலாம் என்றார்கள்.
உதாரணமாக கண் நோய் :
மோகத்தோடு பெண்னை பார்த்தல், தூங்கும் பெண்களை மேல் வெறித்து பார்த்தல், குளிக்கும் பெண்களை மறைந்து பார்த்தல், சத்துக்கள் குறைவு காரணமாக கண்நோய் ஏற்படும்.
வாய்வு :
மற்ற உயிர் பிராணிகளை சித்திரவதை செய்தல், பசுவை அடித்தல், பல ஜீவராசிகளை கொலை செய்தால், ஆனந்த வாயு வரும் குழந்தைகளை பயமுறுத்துதல், உதைத்தல், காலால் மிதித்தல், வறுமையில் வாழும் முதியோர்களை நோகச் செய்தல் ஆகியவற்றினால் வாயுக்கள் வரும் என்றார்கள், இப்படி பல நெறிகளின் நோயை இணைத்தார்கள்.
இவை உண்மையா,பொய்யா என்கிற விவாதம் தேவையில்லை. அன்று சமூக மேற்கோள்கள் காட்டி வைத்தியமும் சமூக சேவைகளும் செய்தனர். இன்று பாக்டீரியா, வைரஸ், கால்சிய குறைவு, இரும்பு சத்து குறைவு, பாஸ்பரஸ் கூடுதல், உப்பு சத்து குறைவு, அல்லது கூடுதல் என உண்மையான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை தீரவில்லை (நோய்) இன்றைய உண்மை நாளை பொய்யாகலாம்.
அன்றும், இன்றும் :
இனி முக்கியமான நோய்கள் அன்றும், இன்றும் எப்படி தீர்ந்தது? ஏன் தீரவில்லை? எப்படி தீர்ப்பது? என்பதைப் பார்க்கலாம்.
இப்படி பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை. ஆராய்ந்து பார்த்தால் சில விஷயங்கள் மட்டும் லேசாக புரிகிறது.
அரிய நூல்கள் எளிதில் கிடைக்காத மூலிகைகள், தங்கள் குருக்கள் மூலமாக அளித்தவைகளைக் கொண்டே மருந்து தயாரித்தார்கள்.
இதனால் தங்களை மிகுந்த சக்தி படைத்தவர்களாக மக்களிடம் காட்டிக் கொண்டார்கள்.
|