3-வது காரணம் :
விதிகள் மாற்றப்படுகின்றன :
(1) சரக்கு சுத்திகள் :
சுக்கு, மிளகு, திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.
“ சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களை நீக்குவது” அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.
எல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்விட்டான் கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன . இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வியடைகின்றன.
இதே போல் வாய்விளங்கம் திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள் 1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்பு மூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும் விதி.
இப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையல் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கு சென்றடைந்து, வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.
இன்று கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயை விரட்டலாம்
இனி பிறப்பு முதல் இறப்பு வரையிலான நோய்கள் வருவதற்கான காரணங்கள். அன்றும், இன்றும் இதற்குண்டான வைத்தியம் என்பதை பார்ப்போம்.
|