முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஆயுர்வேதம்
 
வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம்
Webdunia
பெண்களே வெள்ளைப்படுகிறதா உஷார் - கவனக் குறைவாக இருந்தால் கார்பப்பை இழக்க நேரிடும்.

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்று கூறுகிறார் சித்த மருத்துவர் டாக்டர் சங்கர்.

இது குறித்து மாமல்லன் சித்த மருத்துவமனையின் டாக்டர். சங்கர் இதோ விளக்குகிறார்.

இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.

இந்த நோய் வருவதற்கான காரணங்கள்

* தவறான உணவுப் பழக்கங்கள்
* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்
* சுகாதாரமற்ற உள்ளாடைகள்
* சுய இன்பம் காணுதல்
* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்
* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்
* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்

மேற்கூறிய காரணங்களாலேயே இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள்

* இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.

* உடல் மெலிந்து இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.

* உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.

* பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

* மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.

* இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.
1| 2