முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > கட்டுரைகள் > ஞாபக மறதியைப் போக்கும் உடற்பயிற்சி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஞாபக மறதியைப் போக்கும் உடற்பயிற்சி
உடற்பயிற்சியானது உடலுக்கு பல்வேறு புத்துணர்ச்சிகளை அளித்தாலும், ஞாபக மறதியை போக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வயதாகும் போது பொதுவாக ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் போன்ற பரம்பரை நோய்த் தாக்குதலை உடற்பயிற்சி குறைப்பதாக ஏற்கனவே வெளியான ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுமார் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 138 பேரிடம் நடத்திய ஆய்வில், உடற்பயிற்சியால் ஞாபக மறதி ஏற்படுவதும் தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு 24 வார காலத்திற்கு பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிட நேரம் உடற்பயிற்சி செய்யுமாறும், தலா 50 நிமிடங்களாக பிரித்துக் கொண்டு வாரத்தில் 3 முறை இந்த பயிற்சியை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த உடற்பயிற்சியில் நடைபயிற்சி (walking) அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

பங்கேற்றவர்கள் அனைவரும் வாரத்திற்கு 142 நிமிட நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்தனர். அல்லது தினமும் 20 நிமிட நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்திருப்பது தெரிய வந்தது.

சுமார் 18 மாத காலத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வில், அதில் பங்கேற்றவர்களுக்கு ஞாபகமறதி ஏற்படுவது பெருமளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பரம்பரை நோய்கள் ஏற்படுவதும் மிகவும் தாமதமானதாக தெரிய வந்துள்ளது.

எனவே ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வு முடிவில், வயதானவர்களைப் பொருத்தவரை அன்றாட உடற்பயிற்சி மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்தல் அவசியம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

எனவே, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வோம்! ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்போம்!
மேலும்
கருவிலேயே வைரஸ் பரவுகிறது?
சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
காலை உணவைத் தவிர்க்கலாமா?
மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
சிசேரியன் குழந்தைகளுக்கு டயபடிஸ்?
இதய நோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்