பரம்பரை நோய்கள் எனப்படும் சிலவற்றில், குழந்தைகளுக்கு அவர்களின் தாயிடம் இருந்தோ அல்லது தந்தையின் உயிர் அணு மூலமோ கருவிலேயே வைரஸ் பரவி விடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இரத்தத்தின் மூலம் பரவுவவை விடவும் டி.என்.ஏ-விலேயே பரவி விடுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு ரோஸியோலா நோயை ஏற்படுத்தக்கூடிய ஹெச்ஹெச்வி-6 வைரஸானது, அவர்களின் குரோமோசோம்களிலேயே காணப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஜெர்ம்லைன் டிரான்ஸ்மிஷன் எனப்படும் சினை முட்டையிலோ அல்லது விந்தணுவிலோ இருந்து குழந்தைகளின் குரோமோசோம்களில் இந்த வைரஸ் பரவி விடுவதாகத் தெரிய வந்துள்ளது.
நியூயார்க்கின் ரோசெஸ்டர் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கரோலின் பிரீஸ் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இந்த வைரஸ் இருப்பின் அதிக காய்ச்சல் ஏற்படுவதுடன் உணவுக் குழல் அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் அறிகுறிகளாகத் தென்படும்.
சுமார் 20 விழுக்காடு குழந்தைகள், அதுபோன்ற வைரஸ் காரணமாக அதிக காய்ச்சலால் அவதிப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
|