தாய்ப்பால் வாரம் இந்த ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால், பிற்காலத்தில் இதய நோய் ஏற்படுவதை அது தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாகவும், குழந்தைகளை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் மிகவும் அவசியம் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகள் தாய்ப்பால் அருந்த வேண்டும். இதனால் அந்த குழந்தை வளர்ந்த பிறகு உடலில் கொழுப்புச் சத்தினை குறைக்க ஏதுவாகும் என்றும் தற்போது புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பின் அவர்களை பல்வேறு நோய்களில் இருந்தும் தாய்ப்பால் பாதுகாப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கிரிஸ் ஓன் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தி டெய்லி டெலிகிராஃப் வெளியிட்ட தகவல் கூறுகிறது.
|