இந்தியாவில் காப்பீடு
இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.2 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்றவற்றில் 75 விழுக்காட்டு மக்கள் ஏதாவது ஒரு மருத்துவக் காப்பீட்டினை எடுத்திருப்பார்கள். இதற்கு அதிகக் காரணங்கள் உள்ளன.
அதாவது நமது நாட்டில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் மக்களைச் சென்று சேரும் வகையில் விளம்பரத்தையோ, விளக்கத்தையோ கொடுப்பதில்லை.
இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் சில தனியார் மருத்௦துவக் காப்பீட்டு நிறுவனங்கள், தாங்கள் பதிவு செய்துள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நாம் சிகிச்சை பெறும் கட்டாயத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன.
மேலும், மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும் கூட விபத்திலோ, அவசர சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும்போது நமது சொந்தப் பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டி உள்ளது. சிகிச்சை பெற்று காப்பீட்டு பணம் கைக்கு வந்து சேர ஆறு மாதங்கள் கூட ஆகி விடுகிறது. இது காப்பீட்டு நிறுவனங்கள் மீதான தவறான அபிப்ராயத்தை மக்களிடம் உருவாக்கி விடுகிறது.
எது எப்படி இருந்தாலும் எத்தனையோ விஷயங்களில் உத்திரவாதமும், பாதுகாப்பையும் எதிர்பார்க்கும் நாம், நமது உடலுக்கும், உயிருக்கும் உறுதுணையாக இருக்கும் மருத்துவக் காப்பீட்டிற்கும் முக்கியத்துவம் தருவது சிறந்ததே.
|