முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
Webdunia
வீடுக‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் பொரு‌ட்க‌ள் ‌சிலவ‌ற்‌றி‌ல் உ‌ள்ள வே‌தி‌ப்பொரு‌ள் ஒ‌ன்று, எ‌லிக‌ளி‌‌ன் மா‌ர்பக வள‌ர்‌ச்‌சியை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. ம‌னித‌ர்களு‌க்கு இது நர‌ம்‌பிய‌ல் கோளாறுகளை உருவா‌க்கு‌ம் எ‌‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.

பிலடெ‌ல்‌பியா‌பா‌க்‌ஸ் சே‌‌ஸ் பு‌ற்று நோ‌ய் மைய‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஜோ‌ஸ் ரூசோ தலைமை‌யி‌ல், அ‌ந்த மைய‌த்தை சே‌ர்‌ந்த ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்களு‌ம், ப‌ர்‌மி‌ங்கா‌‌‌ம் அலபாமா ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் ‌சில‌ரு‌ம் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர். இவ‌ர்க‌ள் எ‌லி‌யி‌ல் மே‌ற்கொ‌ண்ட ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல் ‌வீ‌ட்டு‌ உபயோக‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் பூ‌ட்டை‌ல் பெ‌ன்ஸை‌ல் பை‌த்தலே‌ட் (BBP) எ‌ன்ற வே‌தி‌ப் பொரு‌ள் ‌காற்றில் கலந்துவிடுவதால், அதனை சுவாசிக்கும் வீ‌ட்டி‌ல் உ‌ள்ள எ‌லிக‌ளி‌‌ன் மா‌ர்பக வள‌‌ர்‌ச்‌சியை தடு‌‌க்க‌ப்படுவதை க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த வே‌தி‌ப் பொரு‌ள் பரவலாக ‌பிளா‌ஸ்டி‌க் உ‌ற்ப‌த்‌தி‌க்கு பய‌ன்படு‌த்த‌ப் படு‌கிறது. கு‌றி‌ப்பாக ‌வீடுக‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் பை‌ப்புக‌ள், ‌வினைய‌ல் தரை‌த்தள‌ங்க‌ள், தரை‌வி‌‌ரி‌ப்புக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் உபயோ‌கி‌க்க‌‌ப்படு‌கி‌ன்றன. இ‌ந்த வகை வே‌தி‌ப்பொரு‌ட்களை எ‌ண்டோ‌‌க்கி‌ரி‌னை (உ‌ள்ளார‌ச் சுர‌க்‌கிர சுர‌ப்‌பி)‌ சிதை‌க்‌கி‌ன்றன. இ‌ச்‌சிதைவா‌ல் ஹா‌ர்மோ‌ன்க‌ளி‌ன் ‌திற‌ன் ‌சிதை‌‌கிறது. இது ‌வில‌ங்குக‌ளி‌ல் இன‌ப்பெரு‌க்க செ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை குறை‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் ம‌னித‌ர்களு‌க்கு நர‌ம்பு ச‌ம்ம‌‌ந்தமான நோ‌ய்களை உருவா‌க்கவ‌ல்லது எ‌ன்பது‌ம் ஆ‌ய்‌வி‌‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

பூ‌ட்டை‌ல் பெ‌ன்ஸை‌ல் பை‌த்தலே‌ட் (BBP) வே‌தி‌ப்பொரு‌ள் தா‌க்க‌ப்ப‌ட்ட எ‌லிக‌ளிட‌மிரு‌ந்து, அத‌ன் கு‌ட்டிகளு‌க்கு தா‌ய்‌ப் பா‌ல் மூலமாக செ‌ல்‌கிறது. சு‌ற்று‌ச்சூழ‌ல் பாதுகா‌ப்பு ‌நிறுவன‌ம் ம‌னித‌ர்களு‌க்கு இத‌ன் (BBP) அளவு எ‌வ்வளவு உட‌லி‌ல் இரு‌ந்தா‌ல் ‌தீ‌ங்கு ‌விளை‌வி‌க்காது எ‌ன்று வரையறு‌த்து‌‌ள்ளதோ, அ‌ந்த அளவு‌க்கு எ‌லிக‌ளி‌லும் இரு‌ப்பது சோதனை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்தது எ‌ன்று ஜோ‌ஸ் ரூசோ கூ‌றியு‌ள்ளா‌ர். மேலு‌ம் இது எ‌லிக‌ளி‌ன் உட‌ல் எடை‌க்கு‌ம், ‌சிறு‌நீ‌ரி‌ன் எடை‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌கித‌த்தையு‌ம், பாலு‌ட்டிக‌ளி‌ன் சுர‌ப்‌பிக‌ளி‌ன் நடைமுறைக‌ளி‌ல் ‌சில ‌விளைவுகளை உருவா‌க்க கூடியது எ‌ன்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பருவகால‌த்தை எ‌ட்டு‌ம் மு‌ன்பு‌ம், நர‌ம்‌பிய‌‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் பாலு‌ட்டிக‌ளி‌ன் ‌திசு‌க்களை பூ‌ட்டை‌ல் பெ‌ன்ஸை‌ல் பை‌த்தலே‌ட் (BBP) வே‌தி‌ப்பொரு‌ள் தா‌க்‌கியதை‌க் க‌ண்ட‌றி‌ந்து அதனை‌க் அக‌ற்று‌ம் ‌நிலை‌யிலு‌ம், அதனா‌ல் ஏ‌ற்ப‌ட்ட‌ச் ‌சில மா‌ற்ற‌ங்க‌ள் பாலு‌ட்டிக‌ளி‌ன் ‌பி‌ற்கால‌த்‌தி‌ல் பா‌தி‌ப்புகளை உருவா‌க்கலா‌ம். இ‌ந்த வே‌தி‌ப்பொரு‌ள் மா‌ர்பக பு‌ற்று நோயை உருவா‌க்க கூடியதா எ‌ன்பது கு‌றி‌த்து தொட‌ர்‌ந்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ரூசோ தெ‌‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.
மேலும்
கரு‌‌வி‌ழி அடையாளமே துல்லியமானது!
ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் சிகிச்சையும்
கண்ணும் உணவும்
விழி வெண்படல புண் ஒரு பார்வை
எய்ட்ஸ் பாதிப்பா? கவலை வேண்டாம். வாழ்க்கை முடிந்து விடவில்லை!
தொட‌ர்‌ந்து இரவு‌ப் ப‌ணியா? பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌ம் - ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!