முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > கட்டுரைகள்
 
புகையிலை பழக்கத்தால் புற்றுநோயா‌ல் ப‌ரிதவிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்!
‌‌‌விசை‌த்த‌றி தொ‌ழிலாளா‌ரஅருண்குமார்: ‌விசைத்தறி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நுண்ணிய பஞ்சு துகள்கள் தொழிலாளர்களின் நாசி துவாரங்களிலும், உணவுக்குழாய்களிலும் படிந்து ஒவ்வாமை நோய், ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்கள் உருவாகிறது.

தொ‌‌ழிலாள‌ர்களு‌க்கு போதிய கல்வி அறிவு இ‌ல்லாததா‌ல் நோயின் தாக்கம் பற்றி தெரியாமல் இரு‌க்‌கிறது. ‌பி‌ன்ன‌ர் நோய் முற்றிய பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது.

அதும‌ட்டு‌‌மி‌ன்‌றி விசைத்தறிக் கூடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார வசதி இல்லாததால் சாக்கடையில் நீர் தேங்கி பலவித நோய் கள் பரவ வாய்ப்பு ஆகிவிடுகிறது.

விசைத்தறி தொழிலாளி சேகர்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றால் மரு‌த்துவ‌ர்க‌ள் ஆபரேஷன் இங்கு செய்ய முடியாது எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். ப‌ி‌ன்ன‌ர் தனியாக கிளினிக்கிற்கு வரச் சொல்கின்றனர். ஏழைகளா‌கிய எங்களைப் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய சோதனையாக உள்ளது.

காவிரி ஆற்றில் கல‌க்கு‌ம் சாய‌ப்ப‌ட்டறை க‌‌ழிவு ‌‌நீ‌ர், சா‌க்கடை ‌நீ‌ரை‌ குடிப்ப‌தினா‌ல்தா‌ன் பல நோய்கள் பரவுகிறது. இ‌ந்த க‌ழிவுகளை கா‌‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் கல‌ப்பதை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறு‌கி‌ன்‌றன‌ர்.

இது கு‌றி‌த்து திருச்செங்கோடு மருத்துவ சங்கத்தின் செயலாளர் மரு‌த்துவ‌ர் செந்தில்வேல் கூறுகை‌யி‌ல், 'புற்றுநோய்க்கு என்று தனியாக எந்த அறி குறியும் இல்லை. சந்தேகப்படும்படியாக எந்த நோய் அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவ‌ரிட‌ம் செ‌ன்று சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

விசைத்தறி தொழிலாளர்களிடத்தில் புகையிலை, குட்கா, சிகரெட் போன்றவைகள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
 << 1 | 2   
மேலும்
சுத்தமான குடிநீரே ஆரோக்கிய வாழ்வைத் தரும்!
டாக்டர் கே.ஆனந்தகண்ணனின் "என் கண்ணே"
புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் மரபணுக்கள் அழிகின்றன
பிரசவத்தின் போது கணவரும் அவசியம்
எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவருடன்...
பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்