பீட்ரூட் இலை ரசம்

செவ்வாய், 3 நவம்பர் 2009( 16:05 IST )
பீட்ரூட் இலை ரசம் கர்ப்பிணிகளுக்கு நல்லது.
தேவையானப் பொருட்கள்
பீட்ரூட் (இலையுடன் கூடியது) - 2
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
தக்காளி 1
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் - தாளிக்க
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை '
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி, கறிவேப்பிலை
உப்பு
செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து வேகவிடவும்.
அதன் இலைகளை கழுவி நறுக்கி வைக்கவும்.
குக்கரை இறக்கி அதில் ரசப்பொடி, தக்காளி, நசுக்கியப் பூண்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்குங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, பீட்ரூட் இலையையும் போட்டு வதக்கவும்.
பின்னர் வாணலியில் பீட்ரூட் கலவையை ஊத்திக் கொதிக்க விடவும். இறக்கும் போது கொத்துமல்லி மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.