இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » சைவம் » கோஸ் உளு‌ந்து வடை (Goss Urad Dall Vadai | vegetarian | Snacks Item)
Feedback Print Bookmark and Share
 
தேவையானவை

உளுத்தம் பருப்பு-1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ்-1 கப்
இஞ்சி-1 துண்டு
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை-சிறிது
உப்பு-ருசிக்கேற்ப
எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அடு‌ப்‌பி‌‌ல் வாண‌லியை வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடா‌க்கவு‌ம். வாழை இலை அ‌ல்லது பா‌லி‌தீ‌ன் கவ‌ரி‌ல் ‌சிறு உரு‌ண்டைகளாக எடு‌த்து வை‌த்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

வெ‌ங்காய‌த்‌தி‌ற்கு ப‌திலாக கோ‌ஸ் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை சுவை‌யிலு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கோஸ் உளுந்து வடை