விருந்தினருக்காக செய்த சப்பாத்தியோ அல்லது அடையோ அதிக அளவில் மீந்துவிட்டால் அதனை அப்படியே சாப்பிடுவது முடியாத காரியம். அதற்காக அதை கொட்டி விட வேண்டாம்.. நன்கு உதிர்த்து உப்புமா செய்து சாப்பிடலாம்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
சாப்பாத்தி - மீதமானவை எண்ணெய் - சிறிது கடுகு கருவேப்பிலை கடலைப் பருப்பு உளுந்தம் பருப்பு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2
செய்யும் முறை
சப்பாத்தி அல்லது அடையை மிக்சியில் போட்டு அரைத்து உதிரியாக உதிர்த்துக் கொள்ளவும். நீர் விட வேண்டாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் உதிர்த்து வைத்திருக்கும் சப்பாத்தி அல்லது அடையைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான, புதுமையான உப்புமா தயார். யாருக்கும் சொல்லாதீர்கள் இதுதான் பழைய சப்பாத்தி என்று...
|