மிகவும் பிரபலமானது இந்த இட்லி. நீங்கள் சில இடங்களில் இசை சுவைத்திருப்பீர்கள். சுற்றுலா செல்பவர்கள் எடுத்துச் செல்வதும் பெரும்பாலும் இந்த வகை இட்லிகள்தான்.
தேவையானவை
இட்லி மாவு - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - சிறிதளவு கடலைப் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 4 தேங்காய் - ஒரு கப் கடுகு - சிறிது கருவேப்பிலை
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போடவும். பின்னர் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். அதிலேயே கருவேப்பிலையையும் போட்டு தாளித்து எடுத்து மாவில் சேர்க்கவும்.
அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் கைப்பிடி உளுந்து, கைப்பிடி கடலைப் பருப்பைப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
வறுக்கப்பட்ட பருப்புகளையும் மாவில் சேர்க்கவும்.
அதே வாணலியில் தேங்காயை போட்டு லேசாக கிளறி விட்டு இறக்கிவிடவும்.
தேங்காயையும் மாவில் சேர்த்து நன்கு அடித்துக் களக்கவும்.
இதனை இட்லி தட்டுக்களில் ஊற்றி வேகவைத்து எடுங்கள். மிக ருசியான தாளித்த இட்லி கிடைக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி நன்றாக இருக்கும்.
இந்த இட்லியை பொதுவாக இட்லி தட்டுக்களில் அல்லாமல் டம்ளர், கிண்ணங்களில் ஊற்றி வேகவைத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்.
தேவைப்பட்டால், புதுமையை விரும்புவோர் மட்டும் மாவில் கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு அருமையான மஞ்சள் நிற இட்லிகளை தயாரிக்கலாம்.
|