இட்லியை இன்னும் ருசியாக்கும் விதத்தில் அதனை தாளித்து வறுத்து சாப்பிட்டால் எப்படி
தேவையானவை இட்லி மாவு - 1/2 கிலோ இட்லி மிளகாய்ப் பொடி - 1 கப் கறிவேப்பிலை - சிறிது எலுமிச்சம்பழம் சிறியது கடுகு சீரகம் பொடியாக நறுக்கிய பூண்டு எண்ணெய்
செய்யும் முறை
இட்லி மாவை சிறு சிறு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ருசியான வறுத்த இட்லி தயார்.
|