ஒரு சிலருக்கு புளிப்பு, காரம், துவர்ப்பு என்று ஒரு சுவையும் இல்லாமல் சப்பென்று இருக்கும் இட்லியை பிடிக்கவே பிடிக்காது. அது போன்றவர்களுக்கானதுதான் இந்த தயிர் இட்லி. தயிர் இட்லி செய்ய என்ன தேவை? இட்லி மாவு - 2 கப் புளிக்காத புது தயிர் - 3 தேக்கரண்டி தேங்காய் துருவல் பச்சை மிளகாய் முந்திரிப்பருப்பு கடுகு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி ஓமப்பொடி - 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி சீரகத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு மல்லித்தழை
செய்யும் விதம் மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். ஒரு அகண்ட பாத்திரத்தில் கடைந்து வைத்திருக்கும் தயிரை ஊற்றி அதில் இட்லிகளை ஊற விடுங்கள். இட்லி மீது மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறலாம்.
காரம் வேண்டாம் என்றால் வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். தயிர் வடையின் ருசிப் பிடித்தவர்களுக்கு இந்த தயிர் இட்லியும் ரொம்பப் பிடிக்கும்.
|