முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வகை வகையான இ‌ட்‌லிக‌ள்
வகை வகையான இ‌ட்‌லிக‌ள்
செ‌ன்ற வார‌ங்க‌ளி‌ல் ப‌ல்வேறு துவைய‌ல்களை‌ப் பா‌ர்‌த்தோ‌ம். இ‌ந்த வார‌‌த்‌தி‌ல் இரு‌ந்து ப‌ல்வேறு இ‌ட்‌லி வகைகளை‌க் காணலா‌ம்.
நம‌க்கு இ‌ட்‌லி எ‌ன்றது‌ம் ‌வெ‌ள்ளையாக ச‌ட்‌னி, சா‌‌ம்பாருட‌ன் வை‌த்து சா‌ப்‌பிடுவதுதா‌ன் தெ‌ரியு‌ம். இ‌ட்‌லி எ‌ன்பது அதோடு ‌நி‌ன்று ‌விடாது.

கீரை இ‌ட்‌லி

கீரையை எ‌ப்படி செ‌ய்து கொடு‌த்தாலு‌ம் சா‌ப்‌பிடாத குழ‌ந்தைகளு‌க்கு இ‌ட்‌லி செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.
செ‌ய்ய‌த் தேவையானவை

இட்லி மாவு - 1/2 ‌க‌ிலோ
இளம் முருங்கைக் கீரை - ஒரு கை‌ப்‌பிடி
பச்சை மிளகாய் விழுது - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து ந‌ன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
இ‌ட்‌லி மாவுடன் சு‌த்த‌ம் செ‌ய்து வை‌த்‌திரு‌க்கு‌ம் கீரை, பச்சை மிளகாய் விழுது சே‌ர்‌‌த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊ‌ற்றி வேக வைத்து எடுங்கள்.
கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம். அ‌ப்போதுதா‌ன் எ‌ளி‌தி‌ல் வேகு‌ம், குழ‌ந்தைகளு‌க்கு‌ம் ‌ஜீரண‌ம் ஆகு‌ம்.
நி‌ற‌ம் தேவை‌ப்ப‌ட்டா‌ல் ம‌ஞ்ச‌ள் தூ‌ள் அ‌ல்லது கேச‌ரி பவுட‌ரையு‌ம் சே‌ர்‌க்கலா‌ம்.

அழகான ‌கீரை இ‌ட்‌லிக‌ள் தயா‌ர்.
மேலும்
முருங்கை‌க் கா‌ய் சூ‌ப்
காய்கறி சூப்
பிரட் சமோசா
இட்லி உசிலி
நூடுல்ஸ் புளி உப்புமா
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா