மாலை நேர உணவுக்கான சரியான தேர்வு தயிர் பிரட் உருண்டை. சிக்கனமானது,
தயிர் - 1 கப் ரொட்டி (பிரட்) - 1 பாக்கெட் கடலை மாவு - 2 கரண்டி மிளகாய் - 2 வெங்காயம்- 2 உப்பு, கொத்துமல்லி தேவையான அளவு
செய்முறை
ரொட்டியை துண்டு துண்டாக பிய்த்துக் கொள்ளவும். அதில் தயிரை ஊற்றி மசித்துக் கொள்ளவும். இதை பதினைந்து நிமிடம் ஊற வைத்து அதில் மிளகாய், வெங்காயம் பொடி பண்ணி போடவும். தேவையான அளவு உப்பு, கடலை மாவு, கொத்துமல்லியையும் போட்டு நன்றாக பிதைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் சிறுசிறு உருண்டையாகப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.
|