தேங்காய் பால் குழம்பு
தேவையானவை :
துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
கசகசா 6 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
வெந்தயம் 1/2டீஸ்பூன்
புளி எலுமிச்சம் பழ அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள்பொடி 1/4டீஸ்பூன்
வெல்லம் புளியங் கொட்டை அளவு
தேங்காய் எண்ணெய் 50 கிராம்
தேங்காய் 1
பிஞ்சுக் கத்தரிக்காய் 1/2கிலோ
பெருங்காயம் கொஞ்சம்
லவங்கப்பட்டை சிறிதளவு
செய்முறை :
1. தேங்காயைத் துருவி அரைத்து, தேங்காய்ப் பால் பிழிந்து எடுக்கவும்.
2. முதல் பால், இரண்டாம் பால், மூன்றாவது பால் என தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
3. மசாலா சாமான்களை தனித்தனியாக வாணலியில் எண்ணெய் விட்டுச் சிவக்க வறுக்கவும்.
4. வறுத்த மசாலா சாமான்கள் அனைத்தையும் குழம்புக்கு அரைப்பது போல் அரைத்து வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
6. கடுகு வெடித்ததும் சிறிது மஞ்சள் பொடித்தூவி, கத்தரிக்காயை நான்கு பாகங்களாக வாயை கீறி, எண்ணெயில் நன்றாக வதக்கவும்.
7. சிறிது நேரம் மூடி வைத்து, நன்றாக வெந்தபின், கரைத்த புளியை ஊற்றி உப்பையும் வெல்லத்தையும் போட்டு கொதிக்க விடவும்.
8. 10 நிமிடம் கொதித்தபின், அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கரைத்து விடவும்.
9. 10 நிமிடம் கழித்து, மூன்றாம் பாலை ஊற்றி மூடி வைக்கவும்.
10. 5 நிமிடம் கழித்து இரண்டாம் பாலை ஊற்றவும்.
11. எல்லாம் நன்கு கொதித்தபின் மூன்றாவது பாலை விட்டு, கறிவேப்பிலை போட்டு இறக்கி பரிமாறவும்.