தேவையான பொருட்கள் :
சோயா பீன்ஸ் 1/2 கப் சின்ன வெங்காயம் 1 கப் பீன்ஸ் (அ) அவரைக்காய் 4 பட்டாணி 1/4 கப் (உரித்தது) காரட் 2 குடை மிளகாய் (பெரியது) 1 ம.பூசணிக்காய் ஒரு சிறிய துண்டு புளி ஒரு சிறிய துண்டு உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் துவரம் பருப்பு 1 கைப்பிடி சாம்பார் மசாலா பவுடர் 4 டீஸ்பூன் தாளிக்க எண்ணெய் 1 டீஸ்பூன் தாளிக்க எண்ணெய் 1 டீஸ்பூன் கடுகு 2 டீஸ்பூன் சாம்பார் மசாலா பவுடருக்கு தனியா 4 டீஸ்பூன் க.பருப்பு 2 டீஸ்பூன் சிகப்பு மிளகாய் 8 கிராம்பு 5 தேங்காய் வறுத்தது 5 டீஸ்பூன் பட்டை 4 பெருங்காயப் பொடி 1 டீஸ்பூன்
செய்முறை :
சாம்பார் மசாலா பொடியை நன்றாக வறுத்துப் பொடி செய்யவும். புளியைக் கரைத்து 2 கிளாஸ் நீரில் கரைத்து வடிய வைக்கவும்.
சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு உரித்த வெங்காயம், மீடியம் சைஸில் நறுக்கிய எல்லா காய்கறி சோயா பீன்ஸ் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் சாம்பார் மசாலா போட்டு திரும்ப வதக்கிய பிறகு புளித் தண்ணீர் விடவும். உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்றாகக் கொதித்து காய்கள் வெந்தவுடன் வெந்த பருப்பைப் போட்டு கொதித்தவுடன் கடுகும் கருவேப்பிலையையும் போட்டு தாளிக்கவும்.
பின் குறிப்பு :
சோயா பீன்ஸுடன் எல்லா காய்கறியையும் சேர்த்து திக்காக இருந்தால் து.பருப்பு போட வேண்டிய அவசியம் இருக்காது.
|