1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. சைவம்

பச்சை மிளகாய் குழம்பு

பச்சை மிளகாய் குழம்பு
தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் 50 கிராம்

சின்ன வெங்காயம் 50 கிராம்

புளி 50 கிராம்

எண்ணெய் 7 மேசைக் கரண்டி

கடுகு அரைத் தேக்கரண்டி

கறிவேப்பிலை தேவையான அளவு

மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி

உப்பு சிறிதளவ


செய்முறை :

பச்சை மிளகாயை காம்பு நீக்கிவிட்டு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். புளியையும் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அத்துடன் நன்றாக வதக்கவும்.

வதங்கிய பின்பு புளிக்கரைசலையும், உப்பையும், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் மிதமான தீயில் வைத்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி விடவேண்டும்.
About Writer
Webdunia