முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைவம்
 
காரக்குழம்பு
Webdunia
தேவையான பொருட்கள்

தாளிக்க
நல்லெண்ணெய்-1/2 கப்
பெருங்காயம்-1 டீஸ்பூன்
கடுகு-2 டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
கடலை பருப்பு-2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-ஒரு கையளவு
பூண்டு-10 பல்
வெங்காயம்-2 கப்(பொடியாக அரிந்தது)
தக்காளி-2 கப்(பொடியாக அரிந்தது)
வடகம்-2 டீஸ்பூன்
(கடைகளில் கிடைக்கும்)
புளி கரைசல்-1 எலுமிச்சம் பழம் அளவு உருண்டை புளயை ஊறவைத்துது கரைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்காய்
கத்தரிக்காய்
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு

செய்முறை

ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி ஒன்றொன்றாக சேர்த்துக் கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம் நன்று வதங்கிய பின் தக்காளி, காய்கறி ஆகியவற்றை வதக்கவும்.

மஞ்சள் பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

பின்னர் புளிக்கரைசல், உப்பு ஆகியவற்றை விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

குழம்பு சேர்ந்தாற் போல் வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

நீர்க்க இருப்பது போல் இருந்தால் ஒரு ஸ்பூன் அரிசி மாவை 1 கப் தண்ணீரில் கரைத்து குழம்பில் சேர்த்தால் சேர்ந்தாற்போல் ஆகிவிடும்.