Kollu Rasam
தேவையான பொருட்கள்:
கொள்ளு-1 கப் புளி-ஒரு எலுமிச்சை அளவு மிளகு-1டீஸ்பூன் சீரகம்-2 டீஸ்பூன் ஊற வைத்து கரகரப்பாக அரைத்த துவரம் பருப்பு-1 மேஜைக்கரண்டி ரசப்பொடி-4 டீஸ்புன் பெருங்காயம்-1 சிட்டிகை கடுகு-சிறிதளவு கறிவேப்பிலை-சிறிதளவு நெய்-1 டீஸ்பூன் உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
கொள்ளை வெறும் சட்டியில் வறுத்து, நிறைய தண்ணீர் விட்டு, வேக வைத்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ரசத்தை கொதிக்க விடவும். கடைசியில் கொள்ளுத் தண்ணீரையும் விட்டு நுரைத்துப் பொங்கி வரும்போது, கீழே இறக்கி வைக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து ரசத்தில் கொட்டிச் சுடச்சுடப் பரிமாறவும்.
|