இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இனிப்புகள் » தேங்காய் அல்வா
Bookmark and Share Feedback Print
 
தேவையானவை

தேங்காய் - 1
சர்க்கரை - 250 கிராம்
பால் - 1 லிட்டர்
ஏலக்காய் - 6 (பொடி செய்தது)
முந்திரி - 200 கிராம் (அரைப்பதற்கு)
நெய் - 1 ஸ்பூன்
முந்திரி - 50 கிராம் (நெய்யில் வறுத்தது)

செ‌ய்யு‌ம் முறை

தேங்காயையும் முந்திரியையும் தண்ணீர் விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனோடு அரைத்த விழுதை சேர்த்து, அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.

பால் சுண்டி வரும்போது சர்க்கரை மற்றும் ஏலப்பொடி போட்டு நன்றாக இடைவிடாமல் கிளறவும்.

அல்வா பதத்திற்கு வந்ததும், ஒரு தாம்பளத்தில் நெய்யை தடவி, அதில் இந்த அல்வாவை கொட்டி ஆற வைக்கவும்.

வறுத்த முந்திரியை அல்வா மேல் தூவி அலங்கரிக்கவும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தேங்காய் அல்வா