இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இனிப்புகள் » மைதா பால் அல்வா (Maida Halwa | Sweet Dish | How to prepare Maida halwa)
Feedback Print Bookmark and Share
 
சுவையான மைதாபால் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கேச‌ரி பொடி - 1/4 தே‌க்கர‌ண்டி
உருக்கிய நெய் (அல்லது) டால்டா - 1/2 கப்
ஏலப்பொடி - 1 தே‌க்கர‌ண்டி
முந்திரி - 10 பருப்புகள்
திராட்சை - 10

செய்முறை

மைதா மாவை சிறிது இளக்கமாகப் பிசைந்து, மாவு மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு மாவைக் கரைத்து விட்டு, மேலே தெளிந்துள்ள நீரை வடித்து விடவும்.

மீண்டும் அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து தெளிந்த நீரை வடித்து விடுங்கள்.

திரும்ப அதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கழித்து தெளிந்தநீரை வடித்து விட்டால் சுமார் 1 1/2 லிட்டர் மைதா பால் கிடைக்கும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.

நுரைநுரையாக வரும் சமயத்தில் தீயை மட்டுபடுத்தி மைதா பாலை ஊற்றிக் கிளறவும்.

5 நிமிடம் கழித்து கேச‌ரி பொடி, உருக்கிய நெய் சேர்த்துக் கிளறி கெட்டியான அல்வா பதம் வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி விடுங்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மைதா பால் அல்வா