சுவையான மெதுவான லட்டு சாப்பிட்டிருப்பீர்கள். இது உங்களுக்கான மொரு மொரு லாடு
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு 1/2 கிலோ பொரி கடலை 1/4 கிலோ சோயா மாவு 1/4 கிலோ புழுங்கலரிசி 1/4 கிலோ கோதுமை மாவு 1/4 கிலோ ரவை 1/4 கிலோ1 தேங்காய் துருவல் தேங்காயுடையது ஜவ்வரிசி 100 கிராம் முந்திரி 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் ஏலக்காய் 10 திராட்சை 100 கிராம் நெய் 1/2 கிலோ
செய்முறை
ஏலக்காய், தேங்காய்த் துருவல், முந்திரி, வேர்க்கடலை, ரவை, திராட்சையை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின் சோயா மாவு, ஜவ்வரிசி, பாசிப் பருப்பு, பொரி கடலை, புழுங்கலரிசியை வெறும் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.
அச்சு வெல்லத்தை நன்கு சுத்தம் செய்து, பொடித்தெடுத்து கம்பிப் பாகாக சற்று நீர்க்க வைக்கவும். பின் மிக்ஸியில், வறுத்தெடுத்த பாசிப் பருப்பு, பொரி கடலை, புழுங்கலரிசி, முந்திரிப் பருப்பு அனைத்தையும் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வறுத்த ஜவ்வரிசியை சற்று பாகில் போட்டு வைக்கவும். (சுமார் 20 நிமிடம்) பின் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி பாகில் ஊற வைத்தவற்றை நன்கு கலக்கவும். மீதியுள்ள நெய்யை சூடு பண்ணி மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.
பின், பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
|