முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
கோகோ பேடா
Webdunia
கோகோ பேடா பேரைப் பார்த்தே மலைக்காதீங்க. செய்து பார்த்து அசருங்க.

தேவையான பொருட்கள்

மைதா மாவு 1/4 கப்
கோகோ பவுடர் 1/2 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் 1 1/2 கப்
கசகசா 1 தேக்கரண்டி
பாலேடு 1 மேஜைக்கரண்டி
சர்க்கரைத்தூள் 1/2 கப்
பொரிப்பதற்கு ரிஃபைண்ட் ஆயில்


செய்முறை

மைதா மாவு, கோகோ பவுடரை சலித்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல் கசகசாவை பாலேடு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மைதா கோகோ கலவையில் அரைத்தவற்றiச் சேர்த்து நன்கு அடித்துப் பிசையவும். தேவையானால் சிறிது பால் தெளிக்கலாம். மாவை மெல்லிய அப்பளங்களாக இட்டு டைமெண்ட் வடிவத்தில் கத்தரிக்கவும். எண்ணெயைக் காய வைத்து கத்தரித்தவற்றை பொரித்துக் கொள்ளவும். சூடாக இருக்கும்போதே சக்கரைத் தூளை தூவி நன்கு கலக்கவும்.
மேலும்
சாக்லேட் பேடா
பொட்டுக் கடலை லாடு
புட்டு
தேங்காய் மைசூர் பாகு
பாதாம் பருப்பு பேடா
ரவா கேசரி