சாக்லேட் பேடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் 1 ஐசிங் சக்கரை 1½ கப் வெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் 3 டேபிள் ஸ்பூன் சாக்லேட் பவுடர் 5 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் 1 டீஸ்பூன்
செய்முறை :
தேங்காயைத் துருவி அதை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
தேங்காய்ப் பொடியுடன் சிறிதளவு ஐசிங் சக்கரையைச் சேர்த்து பிசைந்து, தேவைப்பட்டால் சிறிதளவு கொதிக்க வைத்து ஆறிய நீரையும் தெளித்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
ஒரு கப் ஐசிங் சக்கரையுடன் ஒரு டீஸ்பூன் கோக்கோ பவுடரைச் சேர்த்துக் கலந்து அதில் தேங்காய் உருண்டைகளைப் போட்டுப் புரட்டி மேலும் உருண்டைகளை இறுகப் பிடிக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், பால் பவுடர், சாக்லேட் பவுடர் இவற்றைக் கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கி எல்லாம் உருகி இளகின பதத்திற்கு வந்தவுடன், இறக்கி, அதில் தேங்காய் உருண்டைகளைப் போட்டுப் புரட்டி எடுக்கவும்.
இங்ஙனம் புரட்டி எடுத்த உருண்டைகளை அகன்ற டிரேயில் அடுக்கி வைத்து ஆற வைக்கவும்.
உருண்டைகளின் மீது மீதமுள்ள ஐசிங் சர்க்கரையால் தேவையான வடிவங்களில் அலங்கரிக்கலாம்.
|