பொட்டுக் கடலை லாடு என்ற இந்த புதிய இனிப்பை சமைத்துப் பாருங்களேன்.
தேவையான பொருட்கள் :
பொட்டுக் கடலை ¼ கிலோ சக்கரை ½ கிலோ கசகசா 50 கிராம் தேங்காய் 1 ( துருவியது ) ஏலக்காய் 6 நெய் 2 டீஸ்பூன்
செய்முறை :
பொட்டுக் கடலையை கைச்சூடு அளவு வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கசகசாவை வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயையும் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும்
ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
மேலே கூறிய அனைத்தையும் ( அரைத்தவை ) ஏலப்பொடியுடன் சேர்த்து, இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.
|