தேங்காயில் மைசூர் பாகு மிகுந்த சுவையான இனிப்பாகும். எளிய இந்த வகையை செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
சக்கரை 700 கிராம் கடலை மாவு 100 கிராம் பெரிய தேங்காய் 1 முந்திரிப் பருப்பு 70 கிராம் கேசரிப் பவுடர் ஏலக்காய் 7 அல்லது 8 நெய் 150 கிராம் முதல் 200 கிராம்
செய்முறை :
தேங்காயை வெளுப்பான துருவலாக, மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பைப் பொடிப் பொடியாக ஒடித்துக் கொஞ்சம் நெய்யை விட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஓர் ஆழாக்கு ஜலத்தில் சக்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து, கெட்டிப் பாகாக ஆன பின் தேங்காய்த் துருவலைக் கொட்டி, சேர்த்து கெட்டியாகக் கொதித்த பின் மாவை தூவிக் கொண்டே கிளறவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்ததும், வறுத்த முந்திரிப் பருப்பைப் போட்டு, கேசரிப் பவுடரையும் போட்டு, நெய்யை இரண்டு அல்லது மூன்று தரமாக விட்டுக் கிளறி. வாசனை வந்து மேலே வெளுப்பு நுரை வந்த பின், கீழே இறக்குமுன் ஏலப்பொடியையும் போட்டுக் கிளறி, தாம்பாளத்தில் அல்லது மைசூர் பாகு தட்டில் கொட்டி, சிறு வாழை இலைத் துண்டால் சமமாகத் தட்டிவிட்டு, வேண்டிய அளவிற்குத் துண்டுகளாகக் கத்தியால் கீறி விட்டு, ஆறிய பின் எடுக்கவும்.
|