பாதாம் பருப்பு பேடா போட்டுப் பாருங்கள். இல்லத்தாரை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு அரை கப் வேர்க்கடலை அரை கப் முந்திரிப் பருப்பு அரை கப் கிஸ்மிஸ் பழம் 50 கிராம் பாம்பே ரவை 1 கப் கடலை மாவு 1 கப் தேங்காய் 1 பால்கோவா 100 கிராம் சக்கரை 3 கப் ஏலக்காய் 10 கேசரி பவுடர் அரை தேக்கரண்டி போர்ன்வீட்டா 2 கப் நெய் தேவையான அளவு
செய்முறை :
வேர்க்கடலை வறுத்து, தோசை அகற்றி விட்டு உடைக்கவும்.
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பையும் வறுத்துத் துண்டு துண்டாக்கவும்.
தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையை நெய்யில் புரட்டி முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்புடன் சேர்க்கவும்.
பெரிய வாணலியில் 2 மேசைக் கரண்டி நெய் விட்டு அது சூடாகியதும் அதில் கடலை மாவைப் போட்டு பொன் நிறமாகும் வரை வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும் அதை இறக்கி இன்னொரு பெரிய பாத்திரத்தில் கொட்டவும்.
மீண்டும் வாணலியில் நெய்விட்டு தேங்காயையும் அடுத்து அதே முறையில் பொன் நிறமாக ரவையையும் வறுத்து எடுத்து விடவும். பிறகு அவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒன்றாக கலக்கவும்.
பெரிய வாணலியில் சக்கரையைக் கொட்டி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சவும். அது நன்கு கம்பிப் பதத்தில் வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்காமலே மாவுக் கலவையை அதில் கொட்டி நன்றாகக் கிளறவும். கூடவே பால்கோவாவையும் அத்துடன் சேர்த்துக் கிளறவும். ஏலக்காயையும், கேசரிப் பவுடரையும் சேர்த்துக் கிளறி இறக்கிக் கொள்ளவும்.
கைகளில் நெய்யைத் தடவிக் கொண்டு அந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். விரலால் உருண்டையின் நடுப்பகுதியில் பள்ளமாக்கவும்.
அந்த பள்ளத்தில் போர்ன்விட்டாவை வைத்து விட்டு, அதன் மேல், கிஸ்மிஸ் பழங்களையும் வைக்கவும்.
இப்படியாக எல்லாவற்றையும் உருட்டி, அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் அடுக்கி சிறிது நேரம் காற்றோட்டமாக வைத்திருக்கவும். குளிர் சாதனப் பெட்டியிலும் வைக்கலாம்.
உருண்டைகள் ஓரளவு கட்டியானதும். அவற்றைக் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து விடவும்.
|