முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
சோளப் பால் பாயசம்
Webdunia
சோளப் பால் பாயசம் செஞ்சி பாருங்களேன்

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்

இளசான மக்காச் சோளம் - 200 கிராம் (உதிர்த்தது)

சர்க்கரை - 250 கிராம்

நெய் -1 ஸ்பூன்

பால் பவுடர் - 4 ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்


செய்முறை

1. மக்காச் சோள முத்துக்களை சுமார் 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

2. வாணலியில் நெய்விட்டு, ஊறிய மக்காச் சோளத்தை போட்டு வறுக்கவும்.

3. வறுபட்ட மக்காச் சோளத்தை மிக்ஸியில் ஒரு திருப்பு திருப்பி எடுக்கவும்.

4. இத்துடன் பால் சேர்த்து, மிருதுவாகவும் வரை வேக வைக்கவும்.

5. மிருதுவான பின் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து மீண்டும் வேக வைக்கவும்.

6. பால் சிவந்து சுண்டி கெட்டியாகும் போது இறக்கி பால் பவுடரை கெட்டியாகக் குழைத்து சேர்த்து மூடி வைக்கவும்.

சோளப் பாயசம் தயார்.
மேலும்
சேமியா பாயஸம்
அடை பிரதமன்
அன்னாசிப் பழ பாயாசம்
வாழைப்பழ பாயாசம்
பாதாம் பருப்பு பாயஸம்
பயத்தம் பருப்பு பாயஸம்