முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
சேமியா பாயஸம்
Webdunia
சேமியா பாயஸம் செய்யும் எளிய முறை

தேவையான பொருட்கள்

சேமியா - 150 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

பால் - 1/2 லிட்டர் ( காய்ச்சியது )

முந்திரி - தேவையான அளவு

ஏலக்காய் - 6 ( பொடி செய்தது )

நெய் - 50 கிராம்

செய்முறை

1. சேமியாவை நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

2. முந்திரி பருப்பையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

3. 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க விட்டு,சேமியாவைப் போட்டு கிளறி விட்டு, வேக வைக்கவும்.

4. சேமியா நன்றாக வெந்தபின் சர்க்கரையை போடவும்.

5. சர்க்கரை நன்கு கரைந்து சேர்ந்த பின் இறக்கிவிடவும்.

6. வறுத்த முந்திரி, ஏலப்பொடி போடவும்.

7. அரை லிட்டர் காய்ச்சிய பாலை சேர்த்து பரிமாறவும்.
மேலும்
அடை பிரதமன்
அன்னாசிப் பழ பாயாசம்
வாழைப்பழ பாயாசம்
பாதாம் பருப்பு பாயஸம்
பயத்தம் பருப்பு பாயஸம்
அவல் பாயஸம்