தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த அன்னாசிப் பழம் 1 சக்கரை 200 கிராம் பாதாம் பருப்பு 50 கிராம் பால் 250 கிராம் பேரிச்சம் பழம் 100 கிராம் முந்திரிப் பருப்பு 25 கிராம் கிஸ்மிஸ் பழம் 25 கிராம் குங்குமப் பூ சிறிதளவு
செய்முறை
அன்னாசிப் பழத்தை, தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கவும்
பாதாம் பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.
அன்னாசிப் பழத்தை மிக்ஸியில் போட்டு, சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சக்கரையை, சாற்றில் கலந்து, அடுப்பில் வைத்து அடியில் பிடித்துக் கொள்ளாமல் கிளறி விடவும்.
பழச்சாறு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.
பாதாம் பருப்பை, தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பாலை நன்கு காய்ச்சியபின், அரைத்த பாதாம் பருப்பை அதில் சேர்க்கவும்.
கொதித்த பழச்சாற்றையும், பாதாம் பருப்பு கலந்த பாலையும் ஒன்றாக கலக்கவும்
வறுத்த முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் பழங்கள் அனைத்தையும் சேர்த்து பரிமாறவும்.
|