பயத்தம் பருப்பு பாயஸம் செய்முறையை அறிய
தேவையான பொருட்கள் :
பயத்தம் பருப்பு 100 கிராம் வெல்லம் 175 கிராம் ஏலக்காய் 7 முந்திரிப்பருப்பு 35 கிராம் பால் 1/4 லிட்டர் அல்லது தேங்காயின் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை :
பயத்தம் பருப்பை இளவறுப்பாக வறுத்து, தண்ணீர் விட்டு, நன்கு கழுவவும்.
சுமார் 1/2 லிட்டர் தண்ணீரை கொதிக்கவிட்டு, களைந்த பருப்பை போட்டு கரைய விடவும்.
நன்றாக கரைந்தபின், வெல்லத்தைப் போட்டு, கரைந்த பின், பாலை அல்லது தேங்காய் பாலை விடவும்.
தேங்காய் பாலை விட்டால், சற்று அடுப்பில் வைத்து எடுக்கவும்.
வறுத்த முந்திரியையும், ஏலப் பொடியையும் போடவும்.
|