பயத்தம் பருப்பு (ஆடிடிபே னுயட) -2 கப் நெய்-1/2 கப் முந்திரி பருப்பு-50 கிராம் திராட்சை-10 கிராம் பொடித்த ஏலக்காய்-1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்காத கோவா-1/2 கப் சர்க்கரை-2 கப்
செய்முறை
பயத்தம் பருப்பை நெய்யில் (சிறிதளவு போதும்) லேசாக வறுத்துக் கொண்டு, அளவான தண்ணீர் விட்டு வேக விடவும்.
ப்ரெஷர் குக்கரில் வேக விட்டால் மிகவும் குழைந்து விடும். பாத்திரத்தில் வேக விட்டால் நன்றாக வெந்திருக்கும். அதே நேரத்தில் குழையாது.
வெந்த பருப்புடன் சர்க்கரை (பொடிக்கத் தேவையில்லை), கோவா, ஏலக்காய் பொடி முதலியவை கலந்து கிளறவும். நன்றாகக் கலந்து சுருள வந்தவுடன் நெய் விட்டு, ஒரு தடவை கிளறி, முந்திரி பருப்பு, திராட்சை முதலியவைகளை நெய்யில் வறுத்துப் போட்டுப் பரிமாறவும்.
|