டிவி நிகழ்ச்சிகளில், நாட்டு மருத்துவ நிகழ்ச்சிகளில், வி.ஐ.பி. ஐட்டமான சுரைக்காய் வெறும் மருந்துக்கு மட்டும் என்று நினைத்து இருக்கும் சகோதரிகளுக்கு ஒரு இனிப்பானை செய்தி. சுரைக்காய் அல்வா செய்து விருந்தினர்களை அசத்தலாம்.
செய்முறைக்கு வருவோமா?
துருவிய சுரைக்காய் - 2 கப் சர்க்கரை - 1 கப் பால் - 4 கப் நெய் - 1/2 கப் (அல்லது வனஸ்பதி) முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய் மேற்கண்ட சாமான்கள் சுமார் 1 கப் வரும்.
எ சுரைக்காயைத் தோலெடுத்து துருவி வைத்து, சிறிது நேரம் கழித்து, அதிலிருந்து வரும் தண்ணீரை வடித்து விட்டு, (தூரக் கொட்ட வேண்டாம்).
எ ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, வறுத்துக் கொள்ள வேண்டும்.(வாசனை வரும் வரை) முறுமுறுவென்று ஆகக் கூடாது.
எ இப்போது பாலை விட்டு, நன்றாகச் சுண்டும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
எ நன்றாக சுண்டி, தளதளவென்று கொதிக்கும்போது சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி, நன்றாகக் கரைந்தவுடன் மீதி நெய்யைக் கொட்டிக் கிளற வேண்டும்.
எ ஏலக்காய் பொடி கலந்து, முந்திரிப்பருப்பு திராட்சை நெய்யில் வறுத்துப் போட்டு சுரள வந்ததும் கீழே இறக்கி தட்டில் கொட்டிப் பரிமாறலாம்.
எ அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டி, மேலே திராட்சை முந்திரி (நெய்யில் வறுத்து) மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
எ விருந்துக்குப் பாயசத்திற்கு பதில் பரிமாறும் நல்ல ஸ்வீட் இப்போது எதையும் கலர்புல் ஆக செய்யப் பிரியப்படுபவர்கள். சிறிது கேசரிக்கலர் சேர்க்கலாம்.
எ கிளறும் போது எப்போது வேண்டுமானாலும் தேவையான அளவு சேர்க்கலாம்.
எ எதையும் கிராண்டாக செய்யப் பிரியப்படுபவர்கள், பாலுடன் சிறிது சர்க்கரை சேர்க்காதா கோவா(பெரிய கடைகளில் கிடைக்கும்) சேர்க்கலாம்.
எங்கே கிளம்பிவிட்டீர்கள். சுரைக்காய் வாங்கவா? செய்து காட்டி அசத்தி விடுங்கள்.!!
|