இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » சமைக்கத் தயாரா? » ‌சில அவசர‌க் கு‌‌றி‌ப்புக‌ள் (Kitchen Tips | Cookery Tips)
Feedback Print Bookmark and Share
 
வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம்.

பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை சமைத்து எடுக்கலாம்.

கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும்.

சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களானால், நன்றாகக் கொதித்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அவற்றை ஊற வைக்கவும்.

பா‌த்‌திர‌த்‌தி‌லபொ‌ங்க‌ல் செ‌ய்ய நேர‌ம் அ‌திகமாக எடு‌க்‌கிறதா, ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌‌ல் பரு‌ப்பையு‌ம், ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் அ‌ரி‌சியையு‌ம் ஒரே நேர‌த்‌தி‌ல் வேக வை‌த்து இறு‌தியாக கல‌ந்துபாரு‌ங்க‌ள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்