முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சமைக்கத் தயாரா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஊத்தாப்ப வடை
ஊத்தாப்ப வடையா புதுசா இருக்கே என்று ஆச்சரியப்பட வேண்டாம். மீதம் இருக்கும் இட்லி மாவை வீணடிக்காமல் செய்யும் வடையாகும்.

தேவையானவை

இட்லி மாவு
நறுக்கிய வெங்கயாம்
பச்சை மிளகாய்
கொத்துமல்லி, கருவேப்பிலை
இஞ்சி

செய்முறை

மீதமிருக்கும் இட்லி மாவில் (கெட்டியாக இருக்க வேண்டும்) நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.

ஒரு சில நிமிடம் மாவு ஊறியதும், அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், அதில் சிறு சிறு வடைகளாக போட்டு எடுக்கவும்.

மாலை நேர உணவுக்கு இது ஏற்றது. சுவையோ ஊத்தாப்பம் போல் இருக்கும். பிள்ளைகளுக்கும் பிடிக்கும்.
மேலும்
கார்ன் ஆ - க்ரெடின்
தாய் நூடுல்ஸ்
டோம் கா பாக்
தாய்லாந்து ஐஸ்கிரீம்
மஷ்ரூம் ரெட் கறி
தாய் கறி