முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
கார்ன் ஆ - க்ரெடின்
Webdunia
இன்றைய கால கட்டத்தில், மிகப் பிரபலமாக வழங்கும் டிபன் ஐட்டம் இது. எந்த சைவ ஹோட்டல், நட்சத்திர ஹோட்டல்களிலும், மெனுகார்டில் காணப்படும் மிகப் பிரபலமான, விலையுயர்ந்த இந்த ஐட்டத்தை வீட்டிலேயே செய்யலாம். சுவையான, சத்தான இந்த ஐட்டத்தை செய்யக் கடை விலையில் 10% செலவு செய்தால் போதும்.

தேவையான பொருட்கள்

அமெரிக்கன் சோளம் என்று சொல்லப்படும் மக்காச் சோளம் கடைகளில் விற்கிறது. இதை ஸ்வீட்கார்ன் என்றும் சொல்வார்கள். இதை உரித்து முத்துக்களை எடுக்கக் கூட அவசியம் இல்லை. துருவினால் போதும். மிக மிருதுவாக இருக்கும். அல்லது சாதாரண மக்காச் சோளம் எரித்தும் உயோகிக்கலாம்.

இவ்வாறு துருவிய சோளம்.....................- 2 கப்
பேபிகார்ன் (பொடியாக நறுக்கியது)......- 2 கப்
மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
உப்பு.........................................................- தேவையான அளவு
மிளகுத்தூள்............................................- 2 Tsp
வதக்குவதற்கு வெள்ணெய்..................- 1 மேஜைக்கரண்டி
ஒயிட் சாஸ்...............................................- 4 கப்
சீஸ்...........................................................- 1 கப்

செய்முறை

வெண்ணெயை சூடாக்கி, வெங்காயம், கார்ன் முதலியவை சேர்த்து வதக்கி உப்பு, மிளகுத்தூள் போட்டு ரெடியாக வைக்கவும். காரம் தேவைப்பட்டால், சிறிதளவு மிளகாய்தூள், அல்லது, 1 வளயீ பச்சை மிளகாய் (நறுக்கியது) சேர்க்கலாம்.

பேக் (Bake) செய்வதற்கு ஆடிணயசநடடய உhநநளந தான் உகந்தது. சாதாரண சீஸ் சூட்டில் உருகாது.

ஒரு 2" அலுமினியம் அல்லது பேகிங் (Baking) செய்யும் கண்ணாடிப் பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணை தடவி, நாம் தயாராக வைத்திருக்கும், கார்னை (மக்காச் சோளக்கலவை) கலவையைப் பரத்தவும். பின் தயாராக வைத்துள்ள, ஒயிட் சாஸைப் பரத்தவும். 1800C சூட்டில் சுமார் 15 நிமிடம் பேக் (Bake) செய்த பின், துருவிய சீஸ் தூவவும். மீண்டும் 5 நிமிடம் பேக் (Bake) செய்து சுடச் சுடப் பரிமாறவும். ஹோட்டல்களில் தக்காளி சாஸ், சில்லி சாஸ் போடுவதில்லை. இப்படித் தான் கொடுக்கிறார்கள்.

குறிப்பு

என் வகுப்பில் செய்யும் போது, நான் சிறிது தக்காளி சாஸ், சில்லி சாஸ் தூவிப் பின் சீஸ் தூவி பேக் செய்கிறேன். சுவை அதிகம். சிறிது தக்காளியை (1/2 கப்) நறுக்கி வெங்காயத்துடன் வதக்கி சேர்க்கலாம்.
மேலும்
தாய் நூடுல்ஸ்
டோம் கா பாக்
தாய்லாந்து ஐஸ்கிரீம்
மஷ்ரூம் ரெட் கறி
தாய் கறி
தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்