தாய்லாந்து ஐஸ்கிரீம் செய்யும் முறை
தேங்காய்ப்பால் (திக்கான முதல் பால்) 2 டம்ளர். மாம்பழம் அல்லது ஸ்டாஸர்ரி பழத்தை உரித்து நறுக்கிய துண்டுகள் 3 ப்ரெஷ் கிரீம் - 1/4 கிலோ பொடித்த சர்க்கரை - 1/2 கப் கஸ்டர்ட் பவுடர் - 4 மேஜைக் கரண்டி பால் - 2 டம்ளர்
Step I
கஸ்டர்ட் பவுடரைக் கலக்கவும். 1/4 கப் குளிர்ந்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலக்கவும். பாக்கி பாலைச் சுட வைக்கவும். கலந்த கஸ்டர்ட் பவுடரைச் சூடான பாலில் கலந்து வேக வைக்கவும். நன்றாகத் திக்கானவுடன் கீழே இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
Step II
1/4 கப் குளிர்ந்த பாலில் கிரீமைச் சேர்த்துக் கலக்கி, பொடித்த சர்க்கரையைச் சேர்த்து, திக்காகும் வரை அடிக்கவும்.
Step III
இப்போது கஸ்டர்ட், பழங்கள், தேங்காய்ப் பால், கலர், மாம்பழ எஸென்ஸ், கிரீம் அத்தனையும் சேர்த்துக் கலக்கி பாத்திரத்தில் கொட்டி 4 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைத்துக் கெட்டியானவுடன் பரிமாறவும்.
|