முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
மஷ்ரூம் ரெட் கறி
Webdunia
தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 10
வெங்காயம்-1 பெரியது
இஞ்சி-50 கிராம்
பூண்ட-10-15
எண்ணெய்-2 டீஸ்பூன்
அஜினமோட்டோ-தேவையான அளவு
காளான்-100 கிராம்
கெட்டியான தேங்காய்ப் பால்-2 கப்
சோயா மில்க் பனீர் - 100 கிராம்
பேபி கார்ன்-4

செய்முறை

1. பெரிய துண்டுகளாக நறுக்கிய சோயா மில்க் பனீர் சிறிது வதக்கி வைத்துக் கொள்ளவும்.

2. ரெட் பேஸ்ட் செய்வதற்கு வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

3. கொதித்த வெங்காயத்துடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

4. இந்த ரெட் பேஸ்டை எண்ணெயில் வதக்கவும். உப்பு, அஜினமோட்டோ இதனுடன் சேர்க்கவும்.

5. கலர் மாறி நல்ல வாசம் வரும் போது தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விடவும்.

6. வதக்கிய சோயா மில்க் பனீர் நறுக்கிய காளான், பேபி கார்னையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைக்கவும். அதிக நேரம் கொதிக்க வேண்டாம். எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்தால் போதும்.

7. இப்போது மஷ்ரூம் ரெட் கறி ரெடி.

இதை நூடுல்ஸுடனோ தாய் ரைஸுடனோ சாப்பிடலாம்.

குறிப்பு:

சோயா மில்க் பனீர்க்கு பதிலாக பனீர் உபயோகப்படுத்தியும் செய்யலாம்.
மேலும்
தாய் கறி
தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்
வெஜிடபிள் கார்ன் சூப்
இத்தாலியன் மின்ஸ்டோன் சூப்
பிரெஞ்ச் வெங்காய சூப்
மெக்ஸிகன் டார்டிலா சூப்