நூடுல்ஸுனே, சாதத்துடனோ சேர்த்து சாப்பிடும் ஐட்டம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி-1 துண்டு பூண்டு, காஇஞ்சி, காய்ந்த மிளகாய், லெமன் கிராஸ் ஆகியவற்றையும் சேர்த்து அரைத்த பேஸ்ட்-2 மேஜைக் கரண்டி வெல்லம்-1/4 கப் மஞ்சள் பொடி-2 டீஸ்பூன் காய்கறி வெந்த தண்ணீர்-2 1/2 கப் சோயா சாஸ்-2 டீஸ்பூன் உப்பு சேனை-துண்டாக நறுக்கியது சின்ன வெங்காயம்-1/2 கப் காளான்-1 பாக்கெட் (மெல்லியதாக நறுக்கவும்) பூண்டு-6-8 (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லி-1 பிடி எலுமிச்சை சாறு-சிறிதளவு
செய்முறை 1. முதலில் சேனையைத் தோலெடுத்துத் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்
2. ஒரு கனமான பாத்திரத்தில், அரைத்த மசாலா விழுது, உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் முதலியவைகளைக் கலந்து கொள்ளவும்.
3. அத்துடன் சோயா சாஸ், காய்கறி வெந்த தண்ணீர் முதலியவை கலந்து கொதிக்கவிடவும்
4. நறுக்கிய சேனையையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். இஞ்சியையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கடைசியில் காளான், வெங்காயம், பூண்டு, எலுமிச்சை ஜுஸ் முதலியவை சேர்க்கவும்.
நன்றாகக் கெட்டியான பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
|