முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்
Webdunia
Thai Fried Rice

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி-1/4 கிலோ
வெண்ணெய்-1 டீஸ்பூன்

காய்கறிகள்

கோஸ்-2 கப்
கேரட்-1
குடை மிளகாய்-1
வெங்காயம்-1
வெங்காயதாள்-2
பேபிகார்ன்-4
தக்காளி-1
பேசில்/ துளசி இலை-1 கட்டு
இஞ்சி நறுக்கியது-1 டீஸ்பூன்
பூண்டு-8-10
பச்சை மிளகாய்-15
வினிகர்-விருப்பப்பட்டால்
அஜினமோட்டோ-தேவையான அளவு
எண்ணெய்-2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

அலங்கரிக்க

வறுத்த வேர்கடலை-தேவைக்கேற்ப

செய்முறை

சாதத்திற்கு

1. சிறிது நேரம் ஊற வைத்து பாஸ்மதி அரிசியை உருக்கிய வெண்ணெயில் போட்டு வறுக்கவும்.

2. இரு மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

3. 15/20 நிமிடங்களில் சாதம் வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.

4. சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொலபொலவென்று இருக்க வேண்டும்.

காய்கறிகளுக்கு

1. வாணலியில் சிறிது எண்ணெயை சூடாக்கி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் இஞ்சி போட்டு வதக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ரொம்பவும் வதங்க வேண்டாம்.

3. பொடியாக அரிந்த குடமிளகாய், கோஸ், கேரட், பேசில் இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

4. வினிகர் (அ) நறுக்கிய தக்காளி சேர்த்து பிரட்டி எடுக்கவும்.

5. பேபி கார்னையும் சேர்த்து இறக்குவதற்கு முன் உப்பு, அஜினமோட்டோ மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

கலப்பதற்கு

6. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு லேயர் சாதம், ஒரு லேயர் காய்கறிகளை சேர்க்கவும்.

7. இவ்வாறு மாற்றி மாற்றி எல்லாவற்றையும் சேர்த்த பின் பாத்திரத்தை குலுக்கி கலக்கவும்.

8. பின்னர் வறுத்த வேர்கடலை கொண்டு அலங்கரிக்கவும்.
மேலும்
வெஜிடபிள் கார்ன் சூப்
இத்தாலியன் மின்ஸ்டோன் சூப்
பிரெஞ்ச் வெங்காய சூப்
மெக்ஸிகன் டார்டிலா சூப்
ஸ்ம்டு பனனா புட்டிங்
கிரேக் டிஷ் - டோல்மா