(Minstrone Soup)
கேரட்-1 கப்- பொடியாக நறுக்கியது பீன்ஸ்-1 கப் கோஸ்-1 கப் உருளை-1 கப்-பொடியாக நறுக்கியது தக்காளி -1 கப் பொடியாக நறுக்கியது
இவை அனைத்தையும் சேர்த்துக் கலந்துக் கொதிக்க வைத்து, (நிறைய தண்ணீர் விடவும்) (சுமார் 1/2 மணி நேரம்). ப்ரௌன் ஸ்டாக் ரெடி செய்து கொள்ளவும்.
இப்படித் தயார் செய்த ப்ரௌன் ஸ்டாக் கேப் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
மக்ரோனி-100 கிராம் வெங்காயம்-1 கப் காரட்-1 கப் மிகப் பொடியாக நறுக்கியது பீன்ஸ்-1 கப் மிகப் பொடியாக நறுக்கியது தக்காளி-1 கப் மிகப் பொடியாக நறுக்கியது சோளமாவு-1/4 கப் மிகப் பொடியாக நறுக்கியது தக்காளி சாஸ்-1/4 கப் மிகப் பொடியாக நறுக்கியது வெண்ணெய்-50 கிராம் உப்பு-சிறிதளவு மிளகுத்தூள்-சிறிதளவு
செய்முறை
முதலில் வெண்ணெயை வாணலியில் சூடாக்கி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மற்றக் காய்கறிகள் சோளமாவு போட்டு வதக்கவும். பின் தயாராக வைத்துள்ள பிரௌன் ஸ்டாக் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும். கொதிக்கும் வெந்நீரில் மக்ரோனியைப் போட்டு வேக வைக்கவும். வெந்த பின் தண்ணீரை வடி கட்டி பச்சைத் தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
கடைசி ஸ்டெப்
ப்ரௌன் ஸ்டாக் சேர்ந்த சூப், உப்பு, மிளகுத்தூள், தக்காளி சாஸ், மக்ரோனி எல்லாம் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சுடச்சுடப் பரிமாறவும்.
|